உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

155

அமர்ந்திருப்பது மலை மற்றொன் றமர்ந்திருப்பது கடல் ஆம் என்றும், ஒன்று காத்தற் றொழிலைச் செய்வது மற்றொன்று அழித்தற் றொழிலைச் செய்வதாம் என்றும், ஒன்றன் திருக்கையிலுள்ளது முத்தலைவேல் மற்றொன்றன் கையிலுள்ளது ஆழியாம் என்றும், ஒன்றன்நிறம் நெருப்பின் சந்நிறம் மற்றொன்றன் நிறம் நீலமாம் என்றும் தெளிவுற விளக்கி,

66

'அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள் ஊர்தி உரைநூல் மறைஉறையுங் கோயில் -வரைநீர்

கருமம் அழிப்புஅளிப்புக் கையதுவேல் நேமி உருவம்எரி கார்மேனி ஒன்று.

என்று அருளிச் செய்தார். இங்ஙனமே பின்னும், அவர்

“ஏற்றான்புள் ளூர்ந்தான் எயில்எரித்தான் மார்பிடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்- கூற்றொருபால்

மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு.”

என்று வற்புறுத்தருளிச் செய்தலுங் காண்க. இவ்வாறு முழுமுதற் கடவுளின் திருவுற ஒருபாற் செம்மை நிறத்தினை யுடைய சிவமாயும் மற்றொருபால் நீல நிறத்தினையுடைய திருமாலாயும் அமைந்து நிற்குமென்பது அவ்விறைவனுருவை நேரே ஒருகாலன்றிப் பலகாலுங் கண்ட திருஞானசம்பந்தப் பெருமான்,

“மாதொருபாலும் மால்ஒரு பாலம் மகிழ்கின்ற நாதன்.”

என்றும்,

(திருப்பிரமபுரம், எய்யாவென்றி என்னும் பதிகம். (2)

“ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் கூறனார்"

(திருத்தென் குடித்திட்டை,6)

என்றும் அருளிச் செய்யுமாற்றானும் நன்குணரப்படும். தனோடு ஒப்பவே திருநாவுக்கரசு அடிகளும்,

66

"குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய்.'

(திருக்கோடிகா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/164&oldid=1588594" இலிருந்து மீள்விக்கப்பட்டது