உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

16. சைவசமயச் சான்றோர் பொய்கையாழ்வார் கருத்தொருமை

இனிப், பொய்கையாழ்வார் தாம் அருளிச்செய்த ‘முதற் றிருவந்தாதி'யின் ஈற்றிற் “பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும்”என்னுஞ் செய்யுளை அமைத்தபடியை ஆராயும் வழி, அவரும் பார்ப்பனர் கட்டிவிட்ட புராண கதைகளினால் டையிடையே பெரிதும் ஈர்ப்புண்டு நான்முகன் திருமால் உருத்திரன் எனக் கடவுளர் மூவர் உளரெனவும் அம் மூவருள்ளும் திருமாலே முதல்வ ரெனவுங் கொண்டு நெடுநாள் மயங்கி இடர்ப்பட்டன ரேனும், பின்னர்த் தாம்செய்த நல்வினைப் பயத்தால் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளின் திருவுருவினைத் தாம் நேரே கட்புலனாற் காணும் பெறற்கரும் பேறு பெற்று, அத் திருவுரு ஒருபாற் சிவந்த நிறத்தினையுடைய சிவவடிவாயும் மற்றொருபால் நீலநிறத்தினையுடைய மால்வடிவாயும் இருக்கக் கண்டு, அதுவே இறைவற்கு உண்மை வடிவாமெனத் தெளிந்து, அச்செய்யுளை அந் நூலின் இறுதியில் முடிந்த முடிபாக வைத்துஅருளிச் செய்தாராகல் வேண்டுமென்பது புலனாகா நிற்கும். திருக்கோவலூரில் ஓர் இடைகழியில் தாம் இறைவன் றிருவுருவி கண்டமையினைப் பொய்கையாழ்வார் "நீயுந் திருமகளும் நின்றாயால்" என்று தாமே குறிப்பிட்டு அருளிச் செய்திருக் கின்றனராகலின், அது மறுக்காலாகா உண்மையே யாமென்க. அங்ஙனம் ஈருருவும் ஓருருவாய் நின்ற இறைவனை நேரே கண்ட துணிவினாற்றான் அவர் தாங்கண்ட அவ் வுருவின் ஒரு பக்கத்தின பெயர் ‘அரன்' மற்றொரு பக்கத்தின் பெயர் ‘நாரணன்' ஆம் என்றும், ஒரு பக்கத்தின் ஊர்தி எருது மற்றொரு பக்கத்தின் ஊர்தி எருவையாம் என்றும், இருகூறும் உரைத்தநூல் ‘மறை’ யாகும் என்றும், அவ்விரண்டுள் ஒன்று

நேரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/163&oldid=1588592" இலிருந்து மீள்விக்கப்பட்டது