உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

153

என்றும் திருநாவுக்கரசு நாயனாரும் அருளிசெய்த வாற்றானும், வைணவ சமயத்தாழ்வார்களுள் முதல்வரான பொய்கை யாழ்வார்,

“பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும் - என்றும்

இருவரங் கத்தால் திரிவரேனும் ஒருவன் ஒருவனங்கத் தென்றும் உளன்”

என்று அருளிச்செய்தமையானும் அறியப்படும். அப்பர் அடுத்தடுத்து வழங்கிய 'புரிசடைப் புண்ணியன்' என்னுஞ் சொற்றொடரைப் பொய்கையாழ்வார் அங்ஙனமே தாமும் எடுத்து வழங்குதலை உற்றுநோக்குங்காற், சிவபிரானைப் புண்ணியன் என்று கொண்ட அப்பரது கருத்தைப் பொய்கை யாழ்வார் முற்றுந் தழுவினமை புலப்படும். இவ்வாற்றாற் பொய்கையாழ்வார் அப்பருக்குப் பின் கி.பி. ஏழாம் நூற்றாண்டி லிருந்தவராதலும் தெற்றென விளங்கும்.

1.

2.

அடிக்குறிப்புகள்

‘அத்தர் பியல்' என்பது ‘அப்பனது பிடரி' எனப் பொருள்படுவதாகும்; 'பியல்’பிடரி எனப் பொருடதல், “பியல் ஊகமும்” என்று 'பெருங்கதை' (1,58,87)யுட் போந்தவாற்றானும் அதன் குறிப்புரையானும் உணர்க.

'குமை' என்னுஞ்சொற் குழைவுப் பொருட்டாகலின் அஃதிங்கே 'கூழ்' எனப் பொருள் தந்தது.

See his 'Tamil Studies', pp. 324 - 338. இருக்கு, 2,1,6,

திருமுருகாற்றுப்படை, 241.

சிறுபாணாற்றுப்படை. 8.

3.

4.

5.

6.

7.

தொல்.உரியியல், 4.

8.

9.

புறநானூறு, 56.

10

ஊர்காண் காதை, 7.

11

விழாவறை காதை, 54.

12.

குறள்: 8.

இந்திரவிழவூரெடுத்த காதை, 169.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/162&oldid=1588591" இலிருந்து மீள்விக்கப்பட்டது