உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் 23

வணங்கி வாழ்த்துதலிலேயே ஒன்றுபட்டு உறைத்துநின்ற மாணிக்கவாசகப்பெருமானைக் கடவுட் டன்மை யிலரெனவும் தலைதடுமாறி மயக்கவுரை நிகழ்த்திய 'தமிழ் வரலாறுடையாரது’ பிழை பாட்டுரையினும் மிக்கதொரு பிழையினை யாண்டுங் காணேம்.

இன்னும், நல்வினை தீவினையின் பயனாய் அறியாமை நீக்கத்தின் பொருட்டு உயிர்கட்கு வரும் பல பிறவிகளும் அவற்றால் வரும் பாவங்களும் எல்லாம்வல்ல இறைவனுக்கு இல்லாமை பற்றியே அவனை அறிவுநூல்கள் “அறவாழி அந்தணன்”12 அல்லது ‘புண்ணியன்' என்று புகலாநிற்கும். இப் 'புண்ணியன்' என்னுஞ் சொற் சிவபிரானுக்கே உரித்தாய் வழங்கப்பட்டமை,

“போதலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன்”

என்று மாணிக்கவாசகப் பெருமானும்,

66

"மருந்து வானவர் தானவர்க் கின்சுவை புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்”

என்றும்,

(திருவெறும்பியூர்,3)

“புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னை” (திருப்பூந்துருத்தி)

என்றும்,

“நாக்கொண்டு பரவும் மடியார்வினை

போக்கவல்ல புரிசடைப் புண்ணியன்”

என்றும்,

“நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்'

என்றும்,

“ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூதநாயகன் புண்ணிய மூர்த்தியே.'

(திருவலஞ்சுழி, 7)

(பொது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/161&oldid=1588590" இலிருந்து மீள்விக்கப்பட்டது