உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

151

அதனையன்றிப் புராணங்கள் கூறிய மூவரையாதல் மற்றுப் பிற தெய்வங்களையாதல் மறந்தும் வணங்காராக, நம்மாழ்வாரோ பிறப்பு இறப்புக்களுட்பட்ட நான்முகன் திருமால் இந்திரன் முதலான தெய்வங்களையும், திருமாலினுந் தாழ்ந்தவர்களாய் இம் மண்ணுலகத்திற் பிறந்து மாண்ட கண்ணன் இராமன் முதலாயினாரையும் பெரிதுயர்த்து ஒரு வரைதுறையின்றி வணங்குகின்றனர்.

“வாங்குநீர் மலருலகில். நிற்பனவுந் திரிவனவும் ஆங்குயிர்கள் பிறப்புஇறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்”

(திருவாய்மொழி, 4,9,5)

6 எனவும்,

"நோயே மூப்பு இறப்பிறப்புப்

பிணியேயென் றிவையொழியக்

கூயேகொள் எடியேனைக்

கொடுவுலகங் காட்டேலே”

(5,1,10)

எனவுங் கூறித் தாம் பிறப்பு இறப்புத் துன்பங்களினின்றுங் கரையேறுதலை வேண்டும் நம்மாழ்வார்,

"மீனாய் ஆமையு மாய்நர சிங்கமு மாய்க்குற ளாய்க்

கானார் ஏனமு மாய்க் கற்கி யாம்இன்னுங் கார்வண்ணனே

(5,1.10)

என்றும்,

“மனப்பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான்பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு”

(6,4,7.)

என்றும் தாமே தங்கடவுளின் பல பிறவிகளை யுடன்பட்டு மொழிதலும், தம் பிறவியொழித்தற்குப் பிறவியொழியாத பிறன் ருவனை வேண்டுதலும் நினைந்துப் பார்க்கும்வழி, அவர் முழுமுதற் கடவுளில்பினைச் சிறிதாயினும் உணர்ந்து பார்க்கும் ஆராய்ச்சியறிவுடைய ரல்லரென்பது துணியப்படும் அன்றோ? இப் பெற்றியினரான நம்மாழ்வாரைக் கடவுட் டன்மையுடைய ரெனவும்,எல்லாம்வல்ல முதல்வனை நேரே கண்டு அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/160&oldid=1588589" இலிருந்து மீள்விக்கப்பட்டது