உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 “ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று எரிஅகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி

மூவா அமரரும் முனிவரும் பிறரும்

யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய யார்கெழு மணிமிடற் றந்தணன்

தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே’”

என்பதனாலும்,

“பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்4

என்பதனாலும்,செவ்விதின் உணர்ந்து கொள்க.

66

"அற்றேல்,

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறுகோடி நாராயணர் அங்ஙனே'

157

என்று நாராயணர் பலர் உளரெனவும், அவரெல்லாம் பிறந்திறக்கு நீரெனவுங் கூறிய சைவசமய ஆசிரியரே, பிறந்திறவா முதல்வனின் ஒருகூறு திருமால் என்று மொழிதல், முன்னொடுபின் முரணாம் பிறவெனின்; அற்றன்று, இறைவனில் ஒருகூறாய் நிற்குந் திருமால் பிறப்பிறப்பு இல்லா உலகன்னையாம் முதல்வியே யல்லாமற் பல பிறவி யெடுத்துழலும் நாராயணர் அல்லர். இவ்வுண்மை,

66

"முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலிற் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே

என்னும் பரிபாடற் பாட்டின் அடிகளானும் உணரப்படும். திருமாலின்மேற் பாடப்பட்ட பரிபாடற் பாட்டுகள் கிறித்து பிறப்பதற்கு இருநூறாண்டுகட்கு முன்னரே இயற்றப் பட்டனவாகும் என்பதற்கு, அப்பாட்டுகளுள் யாண்டும் கண்ணனாவது இராமனாவது குறிப்பிடப்படாமையே சான்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/166&oldid=1588597" இலிருந்து மீள்விக்கப்பட்டது