உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

165

தாகிய அதன் வடிவு நமக்குச் செவ்வனே புலனாதல்போல, அத் தீக்கொழுந்தின்கண் அடங்கித் தோன்றும் நீரின் நீலவடிவு அத்துணை எளிதிற் புலனாகமற் காணப்படுமாறும் ஆராய்ந்துணரர் பாற்று எனவே அப்பனது வடிவு ஒளியினைத் தருந் தீ வடிவிற்றாகலின் அதனைக் காணப்பெறும் அடியார் அவனது ஆண் டன்மையினை எளிதில் உணரப்பெறுவ ரென்பதூஉம், அப்பனுள் அடங்கி நிற்கும் அம்மையின் வடிவு நீர்வடிவிற்றாய்ச் சிறு நீலநிறத்ததாகலின் அவள் தானாக முனைத்துத் தோன்றித் தனது பெண்மை வடிவினைப் புலப்படுத்தினல்லால் அவளது அவ்வடியினை எளிதினுணர்தல் அடியார்க்கு ஏலாதா மென்பதூஉம் இனிது பெறப்படும்.

அப்பனுருவினைத் தெளியக் கண்டாற்போல, அம்மை யுருவினைத் தெளியக் காணப்பெறாது அதனையும் ஆண் வடிவிற்றாகவே பிழைபட வைத்துப் பண்டையோர் வழிபாடு ஆற்றிவராநிற்ப, அவர்க்குப் பின் அவரினுந் தூய உள்ளுணர்வின் மிக்கோராய் வந்தோர் அப்பனோடு அம்மையும் முனைத்துத் தோன்றி அருள்செய்யப் பெற்ற பெறற்கருந் தவமுடைய ராகலின், அவர் நீலவுருவிற்றோன்றி அருள் புரிந்த தெய்வம் பெண் வடிவிற்றாம் உண்மை உண்மை யுணர்ந்து அதனை அவ்வடிவிற்றாகவே வைத்து வழுத்துதலும் பரவுதலுஞ் செய்வாராயினர். இவ்வாறு அத் தெய்வத்தின் உண்மை யுணர்ந்த பின்னும், தமக்கு முன்னிருந்த பண்டையோர் அந் நீலவுருவினை ஆண் வடிவினதாக வைத்தது பிழையென அறிந்தாராயினும், அவ் வழிபாட்டில் உறைத்து நின்றார்க்கு மனப்புழுக்கம் உண்டாகாமைப்பொருட்டு அவர் கொண்டவாறே திருமாலைத் தாமும் ஆண் வடிவினராகக் கொண்டு, அங்ஙனங் கொள்ளினுந் திருமால் அம்மையின் வேறல்லாமையைப் புலப்படுத்துதற்கு அம்மை திருமாலின் தங்ககையாவாள் எனவும், இருவரும் நீலநிறத்தினரேயாவ ரெனவும் பகர்ந்து அவ் விருவரையும் ஒப்பவைத்துச் சிவபிரானோடுகூட்டி வணங்கி வரலாயினர். இவ்வு வ்வுண்மை தெரித்தற் பொருட்டே திருஞானசம்பந்தப் பெருமானும்,

6

“மாதொருபாலும் மால்ஒருபாலும் மகிழ்கின்ற

நாதன்’

என்று அருளிச்செய்தமையினை முன்னும் எடுத்துக் காட்டினாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/174&oldid=1588608" இலிருந்து மீள்விக்கப்பட்டது