உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

166

மறைமலையம் - 23

புக்க

இனி, ஆண்வடிவினை உயர்வாகவும், பெண்வடிவினை இழிவாகவுந் தமது அறியாமையால் நினைக்கப் மாந்தர்களின் காலந்தொட்டுத், திருமாலை ஆண் வடிவில் வைத்து வழிபட்டு வந்தோர் பின்னர் அவரைப் பெண் வடிவினராகக் கோடற்கு மனம் ஒருப்படாராய்ச், சிவபிராற்கு உமைப்பிராட்டி யிருத்தலோ டொப்பத், திருமாற்கும் ஒரு பிராட்டியைச் சேர்க்க விழைந்து 'திருமகள்' என்னும் ஒரு பெண் டெய்வத்தைப் புதிது படைத்து அவரொடு பொருத்தி, அவ்வாற்றாற் சைவ சமயத்துக்கு எதிராக வைணவ சமயத்துக்கும் ஆண் பெண் வடிவின தாகிய ஒரு தெய்வத்தை நிலைநாட்டினர். இவ்வாறெல்லாம் பண்டைத் தமிழரின் ஒரே தெய்வக் கொள்கை இருவேறு வகையினதாய்ப் பிரிந்து, வ க்கிருந்து வந்து குடியேறிய ஆரியரின் புராண கதைக் கலப்பால், நாளேற நாளேற ஒன்றற்கொன்று பெரிதும் மாறுபட்டுப் பகைமை யுடையனவாயின. அங்ஙனமாயினும், தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கொண்ட ஒரு முழுமுதற் கொள்கையே தமிழ்மக்கட்கு உரிய தொன்றாக லானும், அதுவே 'சைவசமயம்' என்னும் பெயராற் பிற்காலத்து வழங்கப்பட்டு வருதலாலும், எச்சமயத்தார்க்கும் ஒரு முதல்வனே அவரவர் தகுதிக்கேற்ப அருள்புரிந்து வருகின்றனன் என்பது சைவசமயக் கோட்பாடாகலானும், இக் கோட் பாட்டினைக் கொண்ட தமிழ்ச் சைவர்கள் பிறசமயத் தெய்வங்களையும் பழியாமல் அவைகளையும் இன்றுகாறும் வணங்கிவரா நிற்கின்றார். நாகூர்த் துலுக்கர் கோவிலிலும், வேளாங் கண்ணிக் கத்தோலிக்கக் கிருத்துவர் மாதா கோவிலிலும் திருப்பதி, சீரங்கம், காஞ்சிபுரம் முதலான இடங்களிலுள்ள திருமால் கோவில்களிலுஞ் சன்று வணங்கும் பெருந் தொகையினர் சைவசமயத்தவராகவே யிருத்தலும், மற்றைச் சமயத் தெய்வங்களின் பெயரைச் சைவர்கள் தமக்கும் பெயராக வழங்கிக் கொள்ளுதல்போல ஏனைச் சமயத்தவர் அங்ஙனம் மற்றைச் சமயத் தெய்வங்களின் பெயரைத் தாமெடுத்து வழங்காதிருத்தலும் ஓர்ந்து நோக்குங்காற் சைவசமயத்தவர்கள் மட்டுமே ஒரு முழுமுதற் கடவுளை எங்கும் வணங்கி எச் சமயத்து மாட்டும் பகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/175&oldid=1588609" இலிருந்து மீள்விக்கப்பட்டது