உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

17. நாச்சியார் பெரியாழ்வார் முதலியவர்களைப் பற்றியஆராய்ச்சி

இனிச், 'சூடிக்கொடுத்த நாச்சியா'ரும் பிறந்த நாட் டாட்டே ஓதாதுணர்ந்தவரெனக் கொண்டு, அவ்வம்மை யாரும் 'திருவாசகத்’தைப் பார்த்து 'குயிற்பத்து' முதலியன பாடினரென்றல் அமையாது, மற்று அவ்வம்மையார் கண்ணபிரான்மேற் பாடிய 'குயிற்பத்தை’ப் பார்த்தே மாணிக்காவாசகர் 'குயிற்பத்து' முதலியன பாடியிருத்தல் வேண்டுமென்பதுபடத் ‘தமிழ் வரலாறுடையார்' கூறுவதுஞ்

சிறிது ஆராயற்பாலது. சூடிக்கொடுத்த நாச்சியார்

தெய்வத்தன்மை யுடையரென இவர் எதனைக் கொண்டு துணிந்தாரென்பது இவரது உரையின்கட் காணப்படவில்லை; ஒரு பூந்தோட்டத்தில் மண்ணைக் கிளறுகையில் நிலத்தின்கண் இருந்து பெரியாழ்வார் என்பவராற் கண்டெடுத்து வளர்க்கப் பட்டார் இவ் வம்மையார் என்று பின்னுள்ள வைணவப் புலவர் எழுதிவைத்திருக்குங் கதையை மெய்யென நம்பியே 'தமிழ் வரலாறுடையார்’ இவரைத் தெய்வத்தன்மை யுடையராகக் கருதினாராதல் வேண்டும். எத்துணைச் சிறந்த பெரியாரும் மக்கள் யாக்கை எடுக்கும்பொழுது, இறைவன் வகுத்த நெறிப்படியே தாய் தந்தையர் சேர்க்கையாற் றாயின் கருப்பையிற் புகுந்து ஊனுடம்பு திருந்திப் பின் நிலத்திற் பிறக்கின்றனர். வைணவர் தாம் தெய்வமாக வழிபடுங் கண்ணனும் இராமனுங்கூட ராமனுங்கூட அந் நெறிப்படியே தேவகி கோசலை என்னும் மாதர்களின் கருப்பையிற் றங்கியே பிறந்தனர். அவ்வாறிருக்கச் சூடிக்கொடுத்த நாச்சியார் மட்டும் நிலத்தின் கீழிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டா ரென்றல் எத்துணைப் பொய்யான உரை கருப்பையிற் பிறத்தல் குற்றமாமென அங்ஙனம் பிறந்தனராயிற், குற்றமாக அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/178&oldid=1588614" இலிருந்து மீள்விக்கப்பட்டது