உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

  • மறைமலையம் - 23

ம்

பிறந்த கண்ணன் இராமன் என்பாரிலும் அவ்வம்மையார் உயர்ந்தாராகல் வேண்டுமன்றோ? அங்ஙனம் அவரினும் உயர்ந்தவராயின் அவர் கண்ணன் ராமன்மேற் கனிவு கொண்டு பாடியதென்னை? இவர் முழுமுதற் கடவுளியல்பினை யுணர்ந்து எங்காயினும் பாடியிருக் கின்றனரோ வெனின் அதுவுமில்லை. அங்ஙனமிருக்க இவரைத் தெய்வத்தன்மை யுடைய ரென்றுகோடல் எவ்வகைச் சான்று பற்றி? இம் மாநிலத்து மக்களுள் ஒருவனாய்ப் பிறந்த கண்ணனையே உயர்பெருந் தெய்வமாகக் கருதி இவர் பாடியிருக்கின்றனரே யல்லாமல், பிறப்பு இறப்புகளில்லாத் திருமாலைப் பாட வில்லையே. கண்ணனையும், அக் கண்ணனுக்கு முதல்வரான திருமாலையுங் கூட வணங்காமல், எல்லாம்வல்ல பிரானையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு, அப்பிரானால் நேரே அருள்செய்யப் பெற்ற மாணிக்கவாசகப் பெருமான் இச்சூடிக்கொடுத்த நாச்சியார் என்னும் ஆண்டாளின் பாடல்களைப் பார்த்துப் பாடினா ரென்னும் 'தமிழ் வரலாறுடையாரது' பிறழ்ச்சியுரையினும் மிக்கதொரு பிறழ்ச்சியுரை பிறிதில்லை.

சிவ

னிக், கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட் தமிழ்நூல்களிற் காணப்படாத காணப்படாத "நந்தகோபன் 'நந்தகோபன் குமரன் ‘கிரிசைகள்' ‘பற்பநாபன்' ‘செகுடு' (செவிடு), 'கும்பகரணன்’ 'குள்ளக்குளிர’ 'மருகள், 'பஞ்சசயனம்' ‘அபிமாநபங்கம், 'காரியம்' அருத்தித்து' 'பாஞ்சசன்னியம்' 'சம்மானம் 'சங்கற்பித்து' 'சிரமப்பட்டோம், 'உரோடம்' (ரோஷம்), 'மசுமை', 'இருடீகேசன், 'சிரீதரன்' 'சரற்கால சந்திரன் ‘மதுசூதன்’, 'அன்னவசம்’, 'இந்திரகோபம்’ ந்திரகோபம்’ ‘கண்ணாலம்’ '(கல்யாணம்), 'சிசுபாபாலன், 'இங்குத்தை, கோவர்த்தநன், 'விநதை சிறுவன்' 'தேநுகன், 'விருந்தாவனம்' முதலான வடசொற்கள் சொற்றொடர் களுங் கொச்சைத் தமிழ்ச் சொற்களும் ஆண்டாளின் பாடல்களிற் காணப்படுதலானும், 'காப்புநாண் கட்டல்’, ‘பொரிமுகந்து அட்டல்' முதலாகப் பிற்காலத்து நடைபெறுந் திருமணச் சடங்குகளை ஆண்டாள் ஒன்றன்பின் ஒன்றாய் முறையாகக் கூறுமாறு போலப் பழைய தமிழ்நூல்கள் வேறெவையுங் கூறக் காணாமையானும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/179&oldid=1588616" இலிருந்து மீள்விக்கப்பட்டது