உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

இத்தகைய

171

பின்றைச் சொல்வழக்குகளும் பொருள் வழக்குகளும் ஒரு சிறிதாயினும் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த ‘திருவாசகந் திருக்கோவையாரின் கட்’ காணப்படாமல் அவற்றின்கட் காணப்படுவன வெல்லாம் பழைய சொல்வழக்குக்குகளும் பொருள் வழக்கு களுமாகவே இருப்பக் காண்டலானும் சூடிக்கொடுத்த நாச்சியார் இயற்றிய பாட்டுக்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதா மென்றலும், அவற்றைப் பார்த்து மாணிக்க வாசகப் பெருமான் 'திருவாசகம்' பாடினா ரென்றலும் தினைத்துணையும் பொருந்தா. சூடிக்கொடுத்த நாச்சி யாருடைய செய்யுட்களிற் போலவே, அவர் தம் தந்தையாரான பெரியாழ்வார் இயற்றிய செய்யுட்களிலும் பின்றைக்காலக் கொச்சைத் தமிழ்ச்சொற்கள் சொற்றொடர்களும் வடசொற்கள் சொற்றொடர்களும் இடையிடையே விரவிக்கிடத்தலின் அவ்விருவரும் அவை விரவத்துவங்கிய கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தவராதல் திண்ணமாம்.' ஆழ்வார்கள் காலங்களை நடுநின்று நன் காராய்ந்த திருச் சீநிவாச ஐயங்காரவர்களும் பெரியாழ்வரது காலம் கி.பி. 1840க்கும் 1915க்கும் இடப்பட்டதாதல் வேண்டுமெனவே யுரைத்தல் காண்க.2

2

இனித், தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய

திருப்பள்ளியெழுச்சி'யைப் பார்த்தே மாணிக்கவாசகர் 'திருப்பள்ளியெழுச்சி' பாடினாராதல் வேண்டுமென்பது படக் கிளந்த 'தமிழ் வரலாறுடையாரது கூற்றுஞ் சிறிது ஆராயற்பாற்று. தொண்டரடிப் பொடியாழ்வார் 'திருப்பள்ளி யெழுச்சி' பாடிய பின்றைக் காலத்திற் புராணக்கதைகளும், அவற்றிற் சொல்லப்பட்ட தேவர்கள் முனிவர்களின் பெயர்களும் இத் தென்றமிழ்நாட்டில் மிகுந்து பரவலாயின வென்பதூஉம், மாணிக்கவாசகப் பெருமான் 'திருப்பள்ளி யெழுச்சி' அருளிச் செய்த பண்டை நாளில் அவை அத்துணை மிகுதியாய் இங்கே பரவவில்லை யென்பதூஉம் அவ்விரண் L னையும் நடுவுநின்று ஒப்பிட்டு நோக்கும் அறிஞரெவரும் நன்குணர்ந்து கொள்வர். ஈண்டும் அவ்வியல்பினைச் சிறிது ஒப்பிட்டுக் காட்டுதும். தொண்டரடிப் பொடியாழ்வார் இயற்றிய திருப்பள்ளி யெழுச்சியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/180&oldid=1588617" இலிருந்து மீள்விக்கப்பட்டது