உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் - 23

யாக்கியதும் மாணிக்கவாசகர் பொருட்டுச் செய்யப்பட்டு, அவர் காலத்திலேயே மதுரைமாநகரின்கண் நிகழ்ந்தமை பெறப்படு மென உரையாமல் அஃது அவர்காலத்து நிகழ்ந்தது அன்றெனத் தாங் கூறியதற்கே முன்னொடுபின் முரணாக நடுநிலைதிறம்பி அழிவழக்குப் பேசியது நன்றாமா? மாணிக்க வாசகர் வரலாற்றை முன்னும் பின்னும் தொடர்புபடுத்தி அதற்கிடையில் இன்றியமையாக் கொளுவுபோல் நிற்கும் 'நரிபரியானசெய்தி', அவர்பொருட்டு நடந்தது அன்றாயின், அடிகளது வரலாறே இல்லையாம். 'மாணிக்கவாசகரென ஒருவர் இருந்திலர்’, ‘திருவாசகந் திருக்கோவையார்' என்பனவும் அவர் செய்தனவல்ல. இவையெல்லாம் பிற்காலத்தில் எவரோ கட்டிவிட்டனர். னர்.” என உண்மையாராய்ச் சிக்குக் கட்டுப் படாமல், “உலகவழக்கும் நூல் வழக்குமெல்லாம் முழுப்பொய்” எனத் தாம் வேண்டியபடியெல்லாம் எளிதிற் கூறிப் போவார்க் காயின், ‘நரிபரியானது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்தது அன்று' எனக் கூறுதலும் அமையும். ஏனை நூல்வழக்கிற்கும் ஆன்றோர் வழக்கிற்குங் கடடுப்பட்டு நின்று உண்மை யாராய்ச்சி செய்வார்க்காயின் அங்ஙனம் உரைப்ப தொரு சிறிதும் அமையாதென்க. இந் 'நரிபரியாக்கிய திருவிளை யாடல்’, ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்த தென்று முன்னரே காட்டப்பட்ட கல்லாடம், 14ஆவது செய்யுளின் கண், கல்லாடம்,14ஆவது

“வெடி வாற் பைங்கட் குறுநரி யினத்தினை ஏழிடந் தோன்றி இனன்நூற் கியைந்து

வீதி போகிய வால் உளைப் புரவி

ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன்.

என்று சொல்லப்பட்டிருத்தலானும், அங்ஙனமே ‘பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்' அதன் 49ஆம் செய்யுளில்,

“உரகன்வாய் கீண்ட மாதவன் போல மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வைகைக்

கூலஞ் சுமக்கக் கொற்றாள் ஆகி

நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண்

டடைப்பது போல உடைப்பது நோக்கிக்

கோமகன் அடிக்க அவனடி வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/19&oldid=1588214" இலிருந்து மீள்விக்கப்பட்டது