உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 எவ்வுயிர் எவ்வுல கெத்துறைக் கெல்லாம்

அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன்

و,

11

என்று குறிக்கப்பட் டிருத்தலானும் அவை யிரண்டும் ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நிகழ்ச்சிகளாதல் பெறப்படும்.படவே. அவை நிகழ்ந்தபோ துடனிருந்த மாணிக்கவாசகரும் ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராதல் தேற்றமாம் என்க.

இனி, அப்பர் அருளிச்செய்த திருப்பூவணத்தேவாரம் முழுவதூஉம் சிவபெருமான் திருவுருவச் சிறப்புக்களையே எடுத்துக் கூறுதலால், அதன் ஒன்பதாஞ் செய்யுளிற் போந்த மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும்’,என்னுஞ் சொற்றொடரும் வைகைக் கரையின்மேல் இறைவன் ஒரு கொற்றாளாய்ப் பிட்டுக்கு மண்சுமந்து நின்ற கோலத்தினையே அறிவுறுத்துமெனச் சிறிது தமிழறிவுடை யாரும் அறிவர். ஈதிங்ஙனமாகவுந், 'தமிழ்வரலாறு' உடையார் அஃது அத் திருவுருவினை உணர்த்தவில்லை. சோமசுந்தரக் கடவுள் வைகைக் கரையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருப்பதனையே உணர்த்துகின்ற தென்கின்றார்.

ப்

ப்

மதுரைத் திருக்கோயிலுள் க்கோயிலுள் இறைவன் எழுந்தருளி யிருப்பதனைச் சுட்டுங் குறிப்பு இப் பாட்டினுட் சிறிதும் இல்லாமையும், இப் பாட்டும் இதன் முன்பின்னுள்ள பாட்டுக்களும் இறைவன் திருவுருவ வகைகளையே விரித்துச் சொல்லுதலும் இத் திருப்பதிகத்தைப் பயில்வார் எவர்க்கும் நன்கு விளங்குமாகலின், 'தமிழ்வரலாறு' உடையார் கொண்ட பொருள் போலிப் புரைப்பொருளாதலை யாங் கூறல்வேண்டா.

66

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்

வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்

பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/20&oldid=1588219" இலிருந்து மீள்விக்கப்பட்டது