உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

  • மறைமலையம் - 23

என்னும் அப் பதிகத்தின் முதற்செய்யுளேபோல் அதன் ஏனையெல்லாச் செய்யுட்களும் இறைவன் அடியார் பொருட்டு ஆங்காங்குக் கொண்ட கோலங்களையே விரித்துரைத்தல் காண்க. “வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறம்” என்பதும், வைகை யாற்றின் தூயகரையின் மேற் பாண்டியன்முன் ஒரு

66

கூடை

யில் மண்சுமந்து நின்ற கூறுபாடுந் தோன்றும்” என்று நேரே பொருள்படுதலும் ‘நின்ற’ ‘திறம்' என்னுஞ் சொற்களின் ஆற்றலும் ஆக்கியோன் கருத்துமெல்லாம் இப் பொருளுக்கே இடந்தருதக்கலும் வெள்ளிடை மலைபோல் விளக்கமாம். ஆதலால், திருநாவுக்கரசுகள் இச் செய்யுளிற் குறிப்பிட்டது தமது காலத்திற்கு முன்னும், மாணிக்கவாசகர் காலத்தின் கண்ணும் நிகழ்ந்த பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலையா மென்று கடைப்பிடிக்க.

இனி, ஒரு சாரார் மலையாளத்தின் மேல் கடற்கரையிற் ‘பெருந்துறை’ என்னும் ஒரு கடற்றுறைப் பட்டினம் உண்டென்றும், திருவாதவூரடிகள் அமைச்சராய் இருந்துழி அங்கே தான் குதிரைகொள்ளச் சென்றாரென்றும் உரையா நிற்பர். அது பொருந்தாது. தமிழ்நாட்டின் தென்பகுதியிற் றிருப்பெருந்துறை யுளதென்பது நன்குபுலப்பட, அடிகளே “தென்பாலைத் திருப்பெருந்துறை யுரையுஞ் சிவ பெருமான்”6 என்றும், “தென் பெருந்துறையாய்”” என்றும், “தென் பெருந் துறை நாயகன்”8 என்றும், “தென் பெருந்துறைச் சேவகன்' என்றும், பலவிடங்களினும் அருளிச்செய்திருத்தலின், அதனை மேல்கரைக்கண் உள்ளதென்று கோடல் யாங்ஙனமென மறுக்க அல்லதூஉம், திருப்பெருந்துறையும் அதனை யடுத்துள்ள ஊர்களும் பண்டை நாளில் 'மிழலைக் கூற்றத்’தில் இருந்தனவாகக் கொள்ளப் பட்டமை, "மிழலைநாட்டு நரியெல்லாம் அழைத்துத் தெருட்டி” என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடல் (28-11) கூறுமாற்றால் நன்குணரப்படும். அங்ஙனம் மிழலைநாட்டிலுள்ள நரிகளையே பரிகளாக்குதற்கு இறைவன் கொண்ட ஏதுவால், நரிக்குடி எனப் பெயர் பெற்றதோர் ஊரும் அதன்கண் இன்றும் உளதென்று நம்பியார் கூறினர். இம் மிழலைக் கூற்றம் நெய்தல் நிலத்துள்ள தென்பதும், இது 'வேள் எவ்வி' என்னும் வேளாளர் தலைவன் ஆட்சியிலிருந்த தென்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/21&oldid=1588223" இலிருந்து மீள்விக்கப்பட்டது