உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

5

  • மறைமலையம் - 23

மேலும், இராவணனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் இருந்தன என்பது பழைய இராமாயணப் பகுதிகளிற் பெறப்படவில்லை. இலங்கையிற் சீதையைத் தேடச் சென்ற அநுமான் இராவணனது அரண்மனை யுட்புக்குச் செல்கின்றுழி இராவணன் பருத்த தலையுங் கழுத்தும் உடையனாய்க் கட்டிலின்மேல் உறங்குதலைக் கண்டான் என்னும் அவ்வளவே சொல்லப்பட்டிருக்கின்றது. இராவணன் போர்க்களத்தில் வந்து நின்றக்காலும் ஒற்றைத் தலையும் இரண்டு கண்களும் உடையனாகவே இருந்தமை குறிக்கப் பட்டிருக்கின்றது. போர்க்களத்தில் இராமன் இராவணனைக் கண்டு உரைகூறினமை சொல்கின்ற விடத்தும், அவன் மக்களெல்லாரையும் போல் ஒரே தலையுடையனா யிருந்தன னெனவே சொல்லப் பட்டிருக்கின்றான். இன்னும், போர்க் களத்தில் இராவணன் உயிரிழந்துவிழ அவன்றன் மனைவிமார் அவன்பாற் போந்து புலம்புதலைப் புகல்கின்ற விடத்தும் அவன் ஒற்றைத் தலையும் இரண்டு கைககளும் உடையனாயிருந்த தன்மையே நுவலப்பட்டிருக்கின்றது. ஆகவே, இராவணனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும் கற்பித்துக் கூறிய கதை பின்னரெழுதிச் சேர்க்கப் பட்டதாதல் தெள்ளிதின் விளங்கும். இராமாயண கதை தென்னாட்டிற் சிறிது தெரியத் துவங்கிய கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெருங்காப்பியங் களிலும் தமிழ்ப்பாட்டுக்களிலுங்கூட இராவணன் குறிக்கப் படும் இடங்களும் கபிலரது குறிஞ்சிக் கலிப்பாட்டு ஒன்றிற்றவிர வேறு யாண்டும் அவன் பத்துத் தலையுடையனாயிருந்தன னென்பது சொல்லப் படாமையின், முதலில் இராமாயண கதையை ஆக்கியோர் அவனை ஏனை மக்களைப் போன்ற வடிவுடையனாகவே வைத்துக் கதை புனைந்தாரென்பதூஉம், கி.மு. இரண்டாவது நூற்றாண்டிற்குப் பின் அக்கதையைப் பெருக்கி வரைந்தோரே அவனுக்குப் பத்துத் தலையும் இருபதுகையும் ஏற்றிவிட்டன ரென்பதூஉம் இனிது புலனாம். எனவே, கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்த கபிலர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்த மாணிக்கவாசகப் பெருமான் முதலியோர் காலந்தொட்டுத்தான் பத்துத்தலை இராவணன் கதை தமிழ்நாட்டிற் றெரிந்து வரலாயிற்றென றுணர்ந்து கொள்க. இவ்வாறு 'வான்மீகி இராமாயணத்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/197&oldid=1588640" இலிருந்து மீள்விக்கப்பட்டது