உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

7

6

2

189

தின்கட் காலங்கடோறும் பிற்பின் வந்தோரால் எழுதி யெழுதிச் சேர்க்கப்பட்டவைகள் பற்பல. இங்ஙனமாகப் பல்லோரும் தாந்தாம் வேண்டியவை களை யெல்லாம் படைத்துப் படைத்து அதன்கட் சேர்த்து வந்தமையினாலே தோன், அதன்கட் சொல்லப்படுஞ் செய்திகள் ஒன்றோடொன்று பெரிதும் மாறுகோளுற்று நிற்கின்றன. இதன்கட் காணப்படும் மாறுபாடுகளிற் பெரும் பாலனவற்றை, வடநூலாராய்ச்சியில் நிகரற்று வயங்கிய மியூர் என்னும் ஆங்கில ஆசிரியர் தாம் பெரிதாராய்ந்து தொகுத்தெழுதிய 'வடநூல் மூலங்கள்' என்னும் நூலின் நான்காம் புத்தகத்தில் நன்கெடுத்துக் காட்டினார்; இங்ஙனம் எடுத்துக்காட்டிய இவ்விரிந்த ஆராய்ச்சி யுரையிலேயே இராமன் திருமாலின் பிறப்பா காமையும் அவர் மெய்ச் சான்றுகள் பல கொண்டு நன்கு நிலைபெறுத்தி யிருக்கின்றார். நம் இந்திய நாட்டுஅறிஞரான வைத்தியா என்பவரும் தாம் எழுதிய ய இராமாயண ஆராய்ச்சியில் இம் மாறுபாடுகளை எடுத்துக் காட்டியிருக் கின்றார். இன்னும், இப்போது பம்பாயிற் பதிப்பிடப் பட்டிருக்கும் வான்மீகி இராமாயணப் புத்தகத்தையும், வங்காளத்திற் பதிப்பிடப்பட்டிருக்கும் வான்மீகி இராமாயணப் புத்தகத்தையும் சிறிது ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இம் மாறுபாடுகளும் புதிய சேர்க்கைகளும் எளிதின் விளங்கா நிற்கும். முன்னையதில் ஐந்நூற்று ஐம்பத்தேழு இயல்களும் பத்தொன்பதாயிரத்து எழுநூற்றுத் தொண்ணூாற்று மூன்று சுலோகங்களும் இருக்கப், பின்னையதில் அறுநூற்றைம்பது இயல்களும் இருபத்து நாலாயிரத்து ஐந்நூற்று இருபத் தெட்டுச் சுலோகங்களுங் காணப்படுகின்றன; ஆனால், ‘உத்தர காண்டம்' இதிற் காணப்படவில்லை. இவ் வேறுபாட்டோடு, ஒன்றிற் கூறப்படுஞ் செய்திகள் மற்றொன்றிற் காணப் படாமலும், இரண்டிலுங் காணப்படுவனவுங் கூட ஒன்றில் ஒருவாறாயும் மற்றொன்றில் மற்றொருவாறாயுந் திரிபெய்திக் கிடக்கின்றன. வடமொழி முதல் நூலாகியி வான்மீகி இராமாயணமே இப்பெற்றிப்பட்ட பிறழ்ச்சிகள் உடைய தாயின், இதன் தமிழ் மொழி பெயர்ப்பாய் இஞ்ஞான்றுலவுங் கம்பர் இராமாயணத்தின் பிறழ்ச்சிகள் எத்துணையவாம் என்பதனை யாம் உணர்த்துதல் வேண்டா. வடமொழி

L

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/198&oldid=1588642" இலிருந்து மீள்விக்கப்பட்டது