உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் - 23

மூலத்தின் இருவேறு பதிப்பையுங் கம்பர் இராமாயணத்தையும் ஒருங்குவைத்து ஒப்பிட்டு நோக்கு வார்க்கே இவ்வுண்மைகள் புலனாம்.

அற்றேற், பத்துத்தலையும் இருபது கையுமுடைய இராவணனிருந்ததும், அவன் கைலாயமலையை வேரோடு பெயர்த் தெடுத்தபோது அதன் குவட்டியின்மீ தெழுந்தருளி யிருந்த சிவபெருமான் தமது திருவடிப் பெருவிரல் ஒன்றனால் அம் மலையை யழுத்தி அவன் றன் இருபது தோள்களையும் அம்மலைக்கீழ் அடர்த்து நெரித்ததும், பின்னர் அவன் அப்பெருமானை அழுது குறையிரப்ப இரங்கி அவற்கு வாளும் நாளும் ஈந்தருளிக் காத்ததும் ஆகிய வை எல்லாம்,

ம்

றன்

ஓதாதுணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானை யுள்ளிட் சைவசமய ஆசிரியன்மார் உண்மையெனக் கொண்டு பதிகங்கடோறும் அவற்றை ஓதுதல் என்னை யெனிற், கூறுதும்; சைவசமய ஆசிரியர் சிவபெருமான் ஒருவனையே குழைந்து குழைந்து உருகிப் பாடுங் கடப்பாடு மேற்கொண்டவர்; தமக்கு முன்னும் தங்காலத்தும் வழங்கிய கதைகளுள் மெய்யாவன இவை, பொய்யாவன இவையென்று ஆராயப் புகுந்தவர் அல்லர்; தமதுள்ளம் உருகுமாற்றாற் சிவபிரான் அருட்செயல் களையும் அருளாண்மைகளையும் எடுத்துரைக்கும் நீரர்; தாங்கண்ட கதைகளுட் சிவபிரான்றன் முழுமுதலாற்றலை எளிதின் எடுத்துக்காட்டுவது எத்தகையதா யிருப்பினும் அதனைத் தாமும் எடுத்தெடுத்துப் பாடி அகங்கரையா நிற்பர். இப்பெற்றியினரான அவர் இராவணன் கதையை யெடுத் தாண்டது, இறைவனது மலையைப் பெயர்த்தெடுக்கும் அத்துணைப் பேராற்றல் வாய்ந்தவனென்று சொல்லப்பட்ட அவனையும் இறைவன் தமது திருவடிப் பெருவிரல் நுதியால் அழுத்தி நெரித்தனன் என்பதனால் இறைவனது அளப்பில் ஆற்றலும், பின்னர் அவன் தனது சிறுமையும் இறைவனது எல்லாம்வல்ல பெருமையும் உணர்ந்து நெஞ்சம் நெக்குடைந்து இறைவனைத் தொழுதவளவானே அவன் அவற்கு இரங்கி வாளும் நாளும் ஈந்தருளினன் என்பதனால் இறைவனது பேரருட்டன்மையும் எல்லார்க்கும் அஃது எளிதின் விளக்குதல் பற்றியேயாம். மேலும், ராவணனைக் கொன்றதைப் பேராண்மையாகக் கருதி அதனால் இராமனை எல்லாம் வல்ல

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/199&oldid=1588644" இலிருந்து மீள்விக்கப்பட்டது