உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

191

கடவுளாகக் கொண்டு வழிபாடு செய்வாரான ஆரியப் பார்ப்பனரது அறியாமை பற்றி, அவனைத்தமது காற்பெருவிரல் நுனியால் ஊன்றி நெரித்த சிவபிரானே முழுமுதற் கடவுளாதல் தேற்றி அக்காலத்திருந்த சைவ சமயச் சான்றோர்கள் அக் கதையைத் தாமும் படைத்து வழங்கினார். என்னை? 'நஞ்சை நஞ்சாற் கொல்லுக! முள்ளை முள்ளாற் களைக!' என்னும் ஆன்றோர் வழக்குப் பற்றித் தீது பயப்பதான ஒரு பொய்யை நன்மை பயப்பதான மற்றொரு பொய்யால் மாற்றுதல் மேலோர் நிறுத்திய ஒழுகலாறாகலான் என்க. இத்தென் னாட்டிலாதல் இலங்கையிலாதல் பத்துத்தலையும் இருபது தோளும் உடைய இராவண என்பானோர் அரக்கன் இருந்தது மில்லை; வடக்கிருந்து இராமன் என்பான் இங்கு வந்தத மில்லை; அவன்றன் மனைவி சீதை யென்பாளை இராவணன் சிறைபிடித்துச் சென்றதுமில்லை; இராமன் குரங்குகளைப் படை திரட்டிச் சென்று அவனொடு பொருது அவளை மீட்டு வந்ததுமில்லை; இங்ஙனமாகவும், இல்லாத இவைகளை யெல்லாம் புனைந்துகட்டி இம் முகத்தால் இராமனைத் தெய்வமாக்கி, அவனையே இங்குள்ள அறிவில்லா மக்கள் வணங்குமாறு செய்து, எல்லா வுலகங்களையும் எல்லா வுயிர்களையுந் தோற்றுவித்துக் காத்து அருள்புரியும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவத்தை அம்மக்கள் வணங்காவாறு மாயம்புரிந்த ஆரியர்தம் தீச்செயலையும் அவர் புனைந்த பொய்க்கதையின் உரத்தையுந் தொலைத்தல் வேண்டியே, அவன் திருக்கைலாய மலையைப் பெயர்த் தெடுத்ததும், அஃதுணர்ந்து இறைவன் தனது காற்பெருவிரல் நுனியால் அவனை அம் மலைக்கீழ் அடர்த்ததும் ஆகிய பிறிதொரு கதையைச் சைவசமயச் சான்றோர் தாமும் புனைந்துகட்டி, அவ்வாயிலால் இராவனொடு படை கூட்டிச் சென்று பலநாட் போர்புரிந்த சிற்றறிவுஞ் சிறுதொழிலுமுடைய ய மக்களுள் ஒருவனே யாதலும், அத்துணை வலிமை மிக்க இராவணனைத் தமது திருவடி பருவிரல் நுனியால் ஒரு நொடியில் அழுத்தி ரு நெரித்த சிவபிரானே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாதலுந் தெளியவைத்தார். பத்துத்தலையும் இருபது கையும் உடைய ராவணன் என்பானோர் அரக்கன் இருந்தான் எனல் உலக

இராமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/200&oldid=1588645" இலிருந்து மீள்விக்கப்பட்டது