உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

193

'உத்தரகாண்டம்’ 6 வங்காளத்திற் பதித்த வான்மீகி இராமாயணத்தின்கட் காணப்படாமை யானும் அவை யெல்லாம் பிற்காலத்து வந்தோரால் எழுதிச் சேர்க்கப்பட்டமை தெற்றென விளங்குதலின், இவ் வியல்புகளை யெல்லாம் ஆராயாது சைவசமய ஆசிரியர் இவை தம்மை உண்மையென நம்பிக் கூறினாரென்னுங் குற்றம் அவர்க்கு உண்டாமாதலால், அவர் அவற்றை ஆராய்ந்து அவற்றை உண்மையெனக் கண்டு கூறினாரென்றல் சிறிதும் ஆகாது; மற்றுத், தங்காலத்து வழங்கிய அக்கதைகள் சிவபிரான்றன் முழுமுதற்றன்மை அறிவுறுக்கும் அந்நுட்பமே பற்றி அவர் அவை தம்மையெடுத் தாண்டனர் என்று கோடலே வாய்ப்புடைத்தாமென விடுக்க.

அற்றேல், முன்னை மிகப் பழைய நூல்களிற் காணப்படாத இராம இராவண கதை பின்னைப் பழைய நூல்கள் முதற் காணப்படலாயினது யாங்ஙனமெனிற் காட்டுதும்: இராம இராவண கதை தென்னாட்டிலேதான் வரவரப்பெருக்கி எழுதப்பட்ட தொன்றாகும்; வைத்தியா என்பவருந் தமது கருத்து இதுவே யாதலை அறிவித்திருக் கின்றார்.8 அங்ஙனமாயினுந், தென்னாட்டின்கட் போந்து குடியேறிய ஆரியப் பார்பனர் அவ்வாறு ஒரு கதை படைத்துச் சேர்த்தற்கு முன் அக்கதைக்கு முதலாய் அதனொடு ஒப்பதொன்றைத் தாம் கண்டன்றோ அதனை அங்ஙனம் படைத்துச் சேர்த்தல் வேண்டுமெனின்; அஃதொக்கும், இராம இராவண கதைக்கு முதலாய் அதனை யொப்பதொன்று இத் தென்னாட்டின்கண் வழங்கியது உண்மையேயாம். மற்று, அஃது யாதோவெனின், அதுவே முருகக்கடவுள் இலங்கையை ஆண்ட சூரன் என்னும் அரக்கனை வென்றமை கூறுங் கதையாகும் மிகப் பழைய தமிழ்ப்பாட்டுக்களும விரவியிருக்கும் பரிபாடல் என்னும் பழைய தமிழ் நூலால் கடுவனிளவெயினனார் நல்லிசைப்புலவர் திருமால்மேற் பாடிய இரண்டு பாடல்களும் முருகக்கடவுள்மேற் பாடிய ஒரு பாடலுங் காணப்படுகின்றன. இவ் விருகடவுளரையும் அவர்களிடம் அருள் ஆண்மைச் செயல்களையும் இவர் மிக்க அன்போடுங் குழைந்துருகிப் பாடியிருக்கின்றார். இவர் திருமாள்மேற் பாடியிருக்கும் மூன்றாம் நான்காம் பரிபாடல்களில் இராம இராவண கதை ரு தினைத்துணையாயினும் எடுத்துக் குறிக்கப்படாமை

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/202&oldid=1588647" இலிருந்து மீள்விக்கப்பட்டது