உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் -23

சற்ற

நுண்ணிய ஆராய்ச்சி யறிவுடையார் எல்லாரானும் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பால தொன்றாம். இவர் தாம் அதனை மொழிந்திலராயினும், இரண்டாம் பரிபாடல் பதின்மூன்றாம் பரிபாடல் பதினைந்தாம் பரிபாடல்களை முறையே திருமாள் மேற் பாடிய கீரந்தையார், நல்லெழினியார், இளம்பெரு வழுதியார் முதலான நல்லிசைப் புலவராதல் அவ்விராம இராவண கதையைக் குறித்து ஏதேனும் மொழிந்ததுண்டோ வென்றால் அதுவும் ஓர் எட்டுணையுங் காணேம். பிற்காலத்து வந்த ஆழ்வார்களெல்லாரும் இராமனைத் திருஞமாலின் பிறப்பாகக் கொண்டு அவன் இராவணனைச் ஆண்மையைப் பலவாற்றானும் வியந்து பாடிஇருக்க, இவ்வாழ்வார்கட்குப் பன்னெடுங்காலம் முற்பட்டிருந்த கடுவனிளவெயினனார் முதலான பழந்தமிழ்ச் சான்றோர்கள் தாம் திருமாலை வழுத்திப் பாடிய பரிபாடற் செய்யுட்களில் இராமனையாதல் அவன் இராவணனைச் செற்றமையாதல் ஒருசிறிதுங் குறியாமை சாலவும் புதுமையாய்க் காணப் படுகின்றதன்றோ? திருமாலைப் பராவிய பரிபாடற் செய்யுட்களையும் பிற்காலத்தவரான ஆழ்வார் பாடல் களையும் புடைபட வைத்து அளந்து காணவல்ல நடுநிலை யாளர்க்கு, இராம இராவண கதை பரிபாடலிற் காணப் UL மை ஆழ்ந்ததோர் ஆராய்ச்சி யுணர்வினைத் தோற்று வித்து, அங்ஙன மொருகதை அக்காலத்திற் றென்னாட்டில் வழங்காமையினையும், அது பிற்காலத்தில் இங்குவந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனராற் புனைந்து சுட்டப் பட்டமையினையும் பொள்ளெனப் புலப்படுக்கும்.

இவ்வாறாக, இராம இராவண கதை திருமான்மேற் பாடப்பட்ட மிகப் பழைய பரிபாடற் செய்யுட்களிலும் ஓர் அணுத்துணையுங் காணப்படாததாக, முருகப்பிரான் சூர்மா னைச் செற்ற கதையோ அக் கடுவனிளவெயினனார் முதலான சான்றோர்இயற்றிய பரிபாடற் செய்யுட்களிற் பலவிடத்தும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஐந்தாம் பரிபாடலிற், “பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர்உழக்கித் தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/203&oldid=1588649" இலிருந்து மீள்விக்கப்பட்டது