உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2 நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொஃறகை மாய அவுணர் மருங்கறத் தபுத்தவேல்

நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகெடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை'

195

என்று முருகப்பிரான் கடன்மேற் சென்று சூரபன்மனைக் கான்று, அவன்றன் கிளைஞராகிய அவுணரை மடித்த வரலாற்றினை ஆசிரியர் கடுவனிளவெயினனார் விளங்கக் கூறினமை காண்க. இங்ஙனமே பதினான்காம் பரிபாடலில்,

“சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே'

என ஆசிரியர் கேசவனாரும், பதினெட்டாம் பரிபாடலில்,

"போர்எதிர்ந் தேற்றார் மதந் தபக்

கார்எதிர்ந் தேற்ற கமஞ்சூல் எழிலிபோல் நீர்நிரந் தேற்ற நிலந்தாங்கு அழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்.'

என ஆசிரியர் குன்றம்பூதனாரும், பத்தொன்பதாம் பரிபாடலில்,

“எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து

தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை யுடைத்தோய்"

எனஆசிரியர் நப்பண்ணனாரும், இருபத்தொன்றாம் பரிபாடலில், 'கொள்ளாத் தெவ்வர் கொள்மா முதல்தடிந்து

புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல்”

என ஆசிரியர் நல்லச்சுதனாரும் முருகக்கடவுள் சூரனைச் செற்ற வரலாறு கூறாநிற்பர். இங்ஙனமே, அகநானூறு (59 புறநானூறு, (23), பதிற்றுப்பத்து (11), திருமுருகாற்றுப்படை (59-61), சிலப்பதிகாரம் (6, 49-51; 23,188-190) முதலிய பழைய தமிழ்நூல்களிற் கூறப்படும் இவ்வரலாற்றுப் பகுதிகளை ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமென அஞ்சி இத்துணையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/204&oldid=1588650" இலிருந்து மீள்விக்கப்பட்டது