உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

  • மறைமலையம் - 23

நிறுத்தினாம். இவ்வாற்றால், தென்கடற்கண் ஒரு தீவில் தலைமை பெற்றிருந்தோனான சூர் என்னுங் கொடியோன் ஒருவனையும் அவனைச் சார்ந்த கிளைஞராகிய அரக்கரையுந் தொலைத்தற் பொருட்டு முருகப்பிரான் அவர்மேற் சென்று அவரையெல்லாம் மடித்த வரலாறு இத் தென்றமிழ் நாட்டின்கட் பண்டைநாளிலே மிக்கு வழங்கினமை நன்கு புலனாம். இவ்வரலாறு இங்கு வழங்கிய பண்டைநாளில், இராம இராவண கதை இந்நாட்டவர்க்கு எள்ளளவுந் தெரியாது; ஏனெனிற், பிற்காலத்தில் திருமாலைப் பாடிப் பரவினவர்களெல்லாரும இராமனைத் திருமாலின் விழுமிய பிறப்பாகக் கொண்டு அவன் இராவணனைக் கொன்ற வெற்றித் திறத்தை வியந்தெடுத்துப் பலகாலும் விளம்பினாற் போலத், திருமாலைப் பாடிய பழைய பரிபாடல் ஆசிரியருள் ஒருவராயினும் ஓர் அணுத்துணையேனும் அவ்விராம இராவண கதையைக் குறியாமையின் என்பது. என்பது. இராாமயண கதை தென்னாட்டில் வழங்காத பண்டைநாளில் முருகக் கடவுள் சூர்மாவினைச் சற்ற வரலாறு அதன்கண் மிக்கு வழங்கினமையானும், ஆரியப் பார்ப்பனர் தென்னாடு புகுதாத காலத்தே வடநாட்டின்கட் பயின்ற ‘தசரத ஜாதகத்’தில் இராமன் தெற்குநோக்கி வந்தானெனவாதல் அவன் இராவணனைக் கொன்றா னெனவாதல் ஏதொன்றுஞ் சொல்லப்படாமை யானும், ஆரியப் பார்ப்பனர் தமிழ் நாட்டிற் குடியேறியபின், இங்குப் பெருகிவழங்கிய 'முருகப்பிரான் சூரனை அட்ட வரலாற்றினைக் கண்டு அது தமிழ்மக்கட்குரிய சைவசமய மேன்மையை இனிது புலப்படுக்குந் திறன் உணர்ந்து மனம் பொறாது, ஆரியராகிய தமக்கும் அத்தகையதோர் உயர்வினை நிலைபெறுத்திக் கொள்வான் விழைந்து, அவ் வரலாற்றினோடு ஒப்ப, 'இராமன் என்பான் என்பான் ஒருவனும் தெற்கே போந்து இலங்கையில் அரசுவீற்றிருந்தஇராவணனைக் கொன்று தேவர்களைக் காத்தான் எனவும், 'அங்ஙனம் ஆண்மைச் செயல் புரிந்த இராமன் என்பான், இராவணனைத்தலைக் கொண்ட அரக்கர் குழாத்தினை அழிக்குமாறு நான்முகன் உருத்திரன் முதலான தேவர்க ளெல்லாரும் ஒருங்கு வேண்டியதற்கு இசைந்து இந் நிலவுலகின்மிசைப் பிறந்த திருமாலே ஆவன்'எனவும் புதுவதாக ஒரு கதைகட்டி, அதன் வாயிலால் ஆரியப் பார்ப்பன ராகிய தமதுயர்வினையும் தாம் வழிபடு தெய்வமாக்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/205&oldid=1588651" இலிருந்து மீள்விக்கப்பட்டது