உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

197

இராமனதுயர்வினையும் நிலைநிறுத்தி வரலாயினரென்னும் உண்மை நன்கு பெறப்படா நிற்கும். எனவே, ா நிற்கும். எனவே, முருகன் சூர்மாவினைச் செற்றவரலாறு, இராமாயணகதை இங்குத் தெரியத்துவங்கிய கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முற்றொட்டே வழங்கிய மிகப்பழைய வரலாறாகலின், இங்குப்போந்த ஆரியப் பார்ப்பனர் அது தன்னை யேமாற்றி 'இராமாயணம்' என்னும் பெயரால் மற்றொன்று படைத்துவிட்டனரே யல்லாமல், இராமாயண கதை உண்மையாக நிகழ்ந்த தன்றென்பது துணிபொருளாமென்க. கந்தபுராண கதையினையும், இராமாயண கதையினையும் புடைபட வைத்து ஒற்றி ஒப்பிட்டுக் காணவல்ல நடுநிலையாளர்க்கு, இராமாயண கதை, கந்தபுராண கதையைப் பார்த்து பின்னர்ச் செய்யப்பட்டதொரு பொய்க் கதையே யாதல் தெற்றென விளங்காநிற்கும்.

அவ்வாறு ‘இராமாயண கதை' பொய்யேயாயின் ஆகுக, 'கந்தபுராணகதை மட்டும் மெய்யேயாதல் யாங்ஙனம்? மனமொழி மெய்களுக்கு எட்டாத இறைவன் ஆறுமுகங்களும் பன்னிருகைகளும் உடைய முருகக்கடவுளாக இமயமலை கட் புல்லடர்ந்த ஒரு பொய்கையிலே இம்மண்ணுலகிற் பிறந்தருளினானென்றலும், அவன் தேவர்களைக் காத்தற் பொருட்டு அவர்கட்கு ஓவாது இடுக்கண் புரிந்துவந்த இலங்கை மன்னனாகிய சூரன்மேற் படையெடுத்துச் சென்று, அவனொடு நேர்நின்று பொருது அவனைச் செற்றனனென்றலும், பிறவும் நம்புதற்கு உரிய அல்லவாகலான் எனிற், கூறுதும்: தென்கடற் கண்ணதொரு தீவில் அரசுபுரிந்த சூரன் என்பானொடு பொருது அவனை மடித்த முருகன் என்பான் உண்மையிலே முருகக்கடவுள்அல்லன்; முழுமுதற் கடவுளாகிய சிவபிரானது கட்டிளமைக் கோலமே 'முருகன்' எனப் படுவதாகும். 'முருகு என்னுஞ் சொல் சொல் இளமை என்னும் பொருட்டாதலைத் ‘திவாகரத்’திற் காண்க. இறைவனை இங்ஙனம் இளமைக் கோலத்தின் வைத்து வழிபட்டு, அவன்றன் அருளைப்பெற்று அவன் பெயர் பூண்டவனான அரசன் ஒருவனே தென்கடல் நோக்கிப் பெயர்ந்து அதன்கண் ஒரு தீவில் அரசாண்ட சூரனைச் செற்றவனாவான். “சிவனடி யாரைச் சிவனெனப் பேணுக என்று சைவ சமயம் அறிவுறுத்தலின், முருகப்பிரான்றன் அடியவனும் அவன் பெயர் பூண்டவனும் ஆன வடநாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/206&oldid=1588653" இலிருந்து மீள்விக்கப்பட்டது