உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் - 23

மன்னன் ஒருவனை முருகப்பிரானாகவும், அவன் ஆற்றிய ஆண்மைத் தொழிலை முருகப்பிரானே செய்த தொன்றாகவும் பண்டை நாளிருந்த சான்றோர் கொள்வா ராயினர். உமையம்மையே தடாதகைப் பிராட்டியாகவும், இறைவனே சுந்தரபாண்டியனாகவும் போந்து மதுரையிற் செங்கோல் ஓச்சினர் என்றாற்போல் வருங்கதைகளும் இப் பெற்றியன வேயாம்; தடாதகையும் சுந்தரபாண்டியனும் அம்மையப் பரருளை முற்றப்பெற்ற அரசியும் அரசனுமே யாவரென்பது அப் புராண கதையின் உண்மைப்பொருள். தக்கன் வேள்வியைத் தகர்த்த வீரபத்திரரும், தாருகாவனத்து இருடிகளின் செருக்கை யழித்த பிட்சாடனரும் அங்ஙனமே எல்லாம்வல்ல சிவபிரான் அருளை முழுதும் பெற்றுக் கிளர்ந்துநின்ற விட

மறவரேயாவ ரெனவும், அவரால் தகப்புண்டழிந்த அவ்வேள்விகள், சிவபிரானை வணங்காமல் ஊனையும் சோமப்பூண்டின் சாறாகிய கள்ளையும் அருந்துதல் விரும்பி இந்திரன் வருணன் மித்திரன் போன்ற சிறு தேவர்களை நோக்கி அக்காலத் திருந்த ஆரியர் வேட்ட வெறியாட்டு வேள்வி களேயா மெனவும் உணர்ந்து கொள்க. இவ்வா றெல்லாம் சிவனடியார்களான அரசர்களும் விடலை மறவர்களும் அருந்தவத் தோர்களும் ஆற்றிய செயற்கருஞ் செயல்களைச் சிவபிரான் செயல் களாகவும், அச்செயல்கள் செய்தோரைச் சிவமூர்த்தங் களாகவும், வைத்துப் புனைந்துரை வகையாற்

புராணக் கதைகள் வரையப்பட்டமையின், இச் சிவமூர்த்தங்களையும் இவற்றிற்கு அப்பாற்பட்ட முழுமுதற் சிவத்தையும் பகுத்துணர்ந்து கொள்ளமாட்டாத பருப்பொரு ளறிவினார் இச் சிவமூர்த்தங்களையே சிவமெனக் கொண்டு விடுவரென அஞ்சியே, முழுமுதற் சிவத்தின் உண்மையியல்பு (சொரூப இலக்கணம்) தேற்றுவான் எழுந்த சைவசித்தாந்த நூல்களாகிய 'திருமந்திரம்' 'சிவஞானபோதம்' முதலாயின. 'புராணங்களுட் கூறப்படுஞ் சிவமூர்த்தங்களெல்லாம் முப்பத்தாறு மாயாதத்துவங்களுள் மூவகை யான்மாக்களின் பாலனவேயாம்' என்றும், 'இம் முப்பத்தாறு தத்துவங்கட்கும் அத் தத்துவங்களுள் நிற்கும் வகும் மூர்த்திகட்கும் அப்பாற்பட்ட முழுமுதற்பொருளே உண்மைச் சிவமாம்’ என்றும் இவை தம் மின் வேற்றுமை தெரித்தோதுவவாயின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/207&oldid=1588654" இலிருந்து மீள்விக்கப்பட்டது