உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

199

வென்க. எனவே, சிவபுராணங்களுட் கூறப்படும் அரும்பெருஞ் செயல்களைப் புரிந்த சிவமூர்த்தங் களெல்லாம் சிவபிரா னருளை நிரம்பப்பெற்று மாயா தத்துவங்களின் வைகி அவனது ஆணை வழிநின்று அச் செயல்களைப் புரிந்த புனித உயிர்களே யல்லாமல், அவரெல்லாம் மாயா தத்துவங் கடந்த முழுமுதற் சிவமாதல் செல்லாமை சைவசித்தாந்த நுண்பொருள் பற்றிக் கடைப்பிடித் துணர்ந்து கொள்க.

சிவத்தின்

வேறாகாத

அஃதொக்கும்; முழுமுதற் முழுமுதற் முருகப்பிரானே நேரிற் போந்து சூர்மாவொடு பொருதான் என்றுரைத்தலாற்படும் இழுக்கு என்னையெனின்! ஐந்தாம் பரிபாடலில் முருகவேள் பிறப்பைக் கூறுகின்றுழி, இந்திரன் வேண்டுகோளுக்கு இசைந்து இறைவன் உமை கொண்ட கருவைப் பல துண்டங்களாகப் பிளந்து கழிக்க, அவ்வாறு கழிந்த அக் கருத்துண்டங்களின் விழுப்பம் உணர்ந்த முனிவர்கள் எழுவரும் அவற்றை ஏற்றுப்போய் வேள்வித் தீக்கட் பெய்து, பின்னர் அவற்றை அதன்கண்ணினின்றும் எடுத்துத் தம் மனைவியர் கைக்கொடுப்ப, அவருள் அருந்ததி ஒழியப் பிற அறுவரும் அவற்றைத் தம் கருப்பையிற் செறித்துச் சூன்முதிர்ந்து மயச்சுனையிற் றாமரைப் பாயலிலே பயந்தாராக, அக் குழவிகளாறும் வளர்ந்து, தம்மை வந்தெதிர்த்த இந்திரனைப் பொருது தொலைக் குங்கால் ஆறு திருவுருவுரும் ஓருருவாயின வென்று அதன் ஆசிரியர் கடுவனிளவெயினனார் அவ்வரலாறு தெரிந் தோதுதல் காண்க. பிற்காலத்தில் வடமொழிக்கண் எழுதப் பட்ட கந்தபுராணம் புகலும் முருகன் பிறப்பு, வரலாறு, பழைய பரிபாடல் வரலாற்றினைத் திரித்து உரைத்தலின், அஃது உண்மையெனக் கொள்ளற் பாற்றன்று. ஆசிரியர் நக்கீரனார், இப்பரிபாடல் வரலாற்றினையே தழுவிக் கூறினாரென்பது 'திருமுருகாற்றுப்படை' யுரையில் உரைகாரர் நச்சினார்க் கினியர் வரைந்த உரைப்பகுதியானும் நன்கு தெளியப்படும். மண்ணுலகிற் பிறக்கும் யாக்கையின் கரு எம்மனோரைப்போல் தசை என்பு நரம்பு குருதி முதலியவற்றால் ஆக்கப்படுவதே யல்லாமற் ‘கந்தபுராணம்' நுவலுமாறு போல், வெறுந் தீப்பொறியால் ஆக்கப்படுவதன்று. வடநாட்டு மன்னன் ஒருவனுக்குப் பிறந்து முருகன் பெயர்பெற்ற குழவி மக்கள் யாக்கை யுடையதாகலின், அக்காலத்து வழங்கிய வரலாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/208&oldid=1588656" இலிருந்து மீள்விக்கப்பட்டது