உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

206

மறைமலையம் - 23

முற்பட்டோனாதலும்,

எனவே, இருங்கோவேள் என்பான் சோழன் கரிகாற்பெருவளத் தானுக்கு அதனால் அவ்விருங் கோவேளைப் பாடிய கபிலரும் கரிகாற் சோழனுக்கு முன்னிருந் தோராதலும் பெறப்படும். 'மணிமேகலை, 'சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திற் காவிரிப்பூம்பட்டினத்தில் அரசுபுரிந்த சோழன் 'கிள்ளிவளவன்' கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்தவனென்பதை மேலே விளக்கிக் காட்டினாம். சோழன் கரிகாற்

என்பான்

ம்

இக்கிள்ளி வளவன், பெருவளத்தானுக்குப் பேரனாகலின், இவனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்ட கரிகாலன் கி.பி. முதல் நூற்றாண்டின் இடையிலாதல் இறுதியிலாதல் இருந்தானாகற் பாலன். ஆகவே, கரிகாலனுக்கும் முற்பட்ட இருங்கோவேள் காலத்தவரான கபிலர் கி.பி. முதல் நூற்றாண்டின் தெளியப்படும்.

முற்பாதியில் இருந்தமை

மேலும், பரணர் என்னும் நல்லிசைப் புலவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்த சேரன்

செங்குட்டுவனையும்,2 அவன்றந்தை 'குடக்கோநெடுஞ் சேரலாதனையும்,3 கரிகாற் பெருவளத்தான் றந்தை ‘உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியையும்" பாடியிருத்தலால் இவர் கி.பி. முதல் நூற்றாண்டின் இடையிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில், அஃதாவது சிறிதேறக் குறையத் தொண்ணூறாண்டுக்குமேல் உயிர் வாழ்ந்தாராதல் வேண்டும். இன்றும் நூறாண்டுக்குமேல் உயிர் வாழ்வார் பலரை யாம் பார்த்திருக்கின்றேம். நூறாண்டுக்கு மேல் நூற்றெண்ப தாண்டு வரையில் உயிர் வாழ்வார் பலரின் உண்மை வரலாறுகளை ஆங்கில மொழிவல்லார் ஒருவர் விரித்து விளக்கி ஒருநூல் எழுதியிருக்கின்றார். இவர்க்கு முன்னரே ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவராய் வயங்கிய ஷெல்லி என்பார் சைவ வுணவின் மேன்மையை இனிது விளக்கி எழுதிய தமது

உரை

நூலில் "முதிய பார் என்னும் புலவர் நூற்று ஐம்பத்திரண்டு ஆண்டும், மேரிபாட்டன் என்னும் அம்மை நூற்றுமுப்பத் தாறு ஆண்டும், 'அர்சீனியஸ்,' 'ரோம்பால்ட் என்னும் இருவர் நூற்றிருபது ஆண்டும், 'எபிபேனியஸ்' என்னும் முனிவர் நூற்றுப்பதினைந்து ஆண்டும், ‘அந்தோணி' என்னும் முனிவர் நூற்றைந்து ஆண்டும், இவ்விந்திய நாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/215&oldid=1588666" இலிருந்து மீள்விக்கப்பட்டது