உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

207

அரசு புரிந்த துலுக்கவேந்தனாகிய ‘அவுரங்கசீப்' என்பான் நூறாண்டும், இன்னும் பலர் நூறாண்டுக்கு மேலும் உயிர் வாழ்ந்த குறிப்புகளை விளக்கமாக எடுத்துக்காட்டி யிருக்கின்றார்.15 பழைய நாளிலிருந்த அருந்தமிழ்ப் புலவர்கள் சேரசோழ பாண்டிய மன்னர்களாலும், பாரி, பேகன் முதலிய வள்ளல்களாலும், னைச் னச் செல்வர்களாலும் போற்றப்பட்டு, எல்லாச் செல்வவளனு முடையராய்க் கவலையின்றிக் கல்விப் பயிற்சியிலேயே காலங் கழித்தமையின் அவர்கள் அங்ஙனம் நீண்ட காலம் காலம் உயிர் உயிர் வாழ்ந்தமை வாய்வதேயாம்.

நன்

நன்கு

வ்வாறு நீண்டகாலம் இனிது உயிர்வாழ்ந்த பரணர் என்னும் நல்லிசைப் புலவரும், இவர்க்கு விழுமிய நண்பரான கபிலர் என்னும் நல்லிசைப் புலவரும், 'வையாவிக்கோப் பெரும் பேகனை'யும் அவன்றன் மனைவியையும் ஒருமைப் படுத்தல் வேண்டிப் புறநானூற்றிற் சுவைதுளும்பும் பல பாட்டுக்கள் பாடியிருத்தலாற், கபிலரும் பரணரும் ஒரு காலத்தவரென்பது தெற்றெனப் புலப்படும். அங்ஙன மாயினும், வையாவிக்கோப் பெரும்பேகன் காலத்திற் கபிலர் ஆண்டில் மிக முதிர்ந் தோராயும், பரணர் ஆண்டில் இளைஞராயும் இருந்தாராதல் வேண்டும். ஏனென்றாற், கபிலர்க்கு மிகச் சிறந்த நண்பனாகிய 'கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை' என்னுஞ் சேரவேந்தன் வென்றியிற் சிறந்துவிளங்கிய காலத்திற் கபிலர் உயிரோடிருந்திலரே என அவ்வரசன் அவரை நினைந்து வருந்திய வருத்தத்தைப், 'பொருந்தில் இளங்கீரனார்', “செறுத்த செய்யுட் செய்செந் நாவின்

வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுஉள னாயின் நன்றுமன் என்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்ப16”

என்று அவனை நோக்கிப் பாடியவாற்றால் தெளியப்படுதலின்

என்க.

னி, ச் சேரவேந்தனாகிய ‘யானைக்கட்சேய்

மாந்தரஞ்சேர லிரும்பொறை” என்பான். 'செல்வக்கடுங் கோவாழியாதனுக்கு' இளையமகன் ஆவன் என்பதூஉம், செல்வக்கடுங்கோவாழியா தன்மேற் 'பதிற்றுப் பத்தி'யிலுள்ள ஏழாம்பத்தைப் பாடிய கபிலர், இவனுக்கு மக்களாம் உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/216&oldid=1588667" இலிருந்து மீள்விக்கப்பட்டது