உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

209

த்

ஆண்டுகளில் இயற்றப்பட்ட பழந்தமிழ்ப் பாடல்களில் யாண்டுங் காணப்படாமையின் அஃது அக் காலத்தில் தமிழ் நாட்டவர்க்குத் தெரியாத தொன்றென்பதூஉம் தெலுங்காணத்தில் வந்து குடியேறிய ஆரியர் கட்டிய இராம இராவண கதைக்கு எதிராக ஆங்கிருந்த பழைய சைவ நன்மக்களே சிவபிரான்றன் முழுமுதற் றன்மையை புலப்படுத்துதற் பொருட்டு அக் கதையைப் படைத்து வைத்தா ரென்பதூஉம் எமது மேற்கோளாகலிற்" கபிலரது குறிஞ்சிக் கலியில் அக்கதை காணப்படுதல் கொண்டு எமதுரை

வழுவாதலில்லை யென்று கடைப்பிடிக்க. கபிலர் வடக்கிருந்து போந்து தமிழ்நாட்டிற் குடியேறிய ஆரியப் பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுதலின், அவர் அக் கதையினை உ உணர்ந்தமை பொருத்தமேயாம். மற்றுத், தமிழ்நாட்டில் கி.பி.முதல் நூற்றாண்டின்கண் இருந்த தமிழ் நல்லிசைப் புலவர் எவரும் அக் கதையினைக் கூறாமையே ஈண்டுக் கருதற்பாற்று.

ங்ஙனமாகக்,

கி.பி.முதல் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டவர்க்குச் சிறிது சிறிதாகத் தெரியா துவங்கிய இராம இராவண கதை பின்னர் அவரிடையே மிக்கு வழங்கலானதும், அம் முகத்தால்இராமன் திருமாலின் தெய்வப்பிறப்பாகக் கொள்ளப்பட்டு அவரோடொப்பத் தெய்வமாக வைத்து வணங்கப்படலானதும் எல்லாம் கி.பி. ஏழாம் நுற்றாண்டிற்கும் எட்டாம் நூற்றாண்டிற்கும் பின்னர் வரவரப் பெருகி நிகழ்ந்தவனவாகும். இவ்வுண்மை பழைய திருக்கோயிற் சுவர்களிற் செதுக்கப்பட்டிருக்கும் பழைய கதைக்குறிப்புகளைக் கொண்டும் நன்கு தெளியப்படும். கற்செதுக்கு உருக்களுள் மிகப் பழையவாக இஞ்ஞான்று ஆராய்ந்து தெளியப்பட்ட ‘திருக்கடன் மல்லை' எனப் பழைய நூல்களிற் பெயர் கூறப்படும். ‘மகாபலிபுரத்’தின் கண் உள்ள கற்பாறைக் கோயில்களில் அமைக்கப்பட்டிருப்பனவேயாம். இவ்வூரின்கண் உள்ள

வை,

கற்பாறைகளைக் குடைந்து வியக்கத்தக்க கோயில்களையும் அக்கோயிற்சுவர்களிற் பல உருக்களையும் ஆக்குவித்தோன் கி.பி. ஏழாம் நூற்றாண்டினிடையில் நிகரற்ற வென்றி வேந்தனாய் விளங்கிய ‘முதலாம் நரசிம்மவர்ம பல்லவமல்லனே' யாவன். இவ் வேந்தனது படைக்குத்தான் சிறுத்தொண்ட நாயனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/218&oldid=1588669" இலிருந்து மீள்விக்கப்பட்டது