உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் - 23

தலைவராயிருந்தனர்; திருஞானசம்பந்தப் பெருமானும் இவ் வேந்தன் காலத்திலேதான் திகழ்ந்தனர்; இம்மன்னர் பிரானின் தந்தையான மகேந்திரவர்ம பல்லவ அரசனே' முதலிற் சமண்மதந் தழுவினவனாயிருந்து, திருநாவுக்கரசு நாயனாரைக் கல்லிற் பிணைத்துக் கடலில் வீழ்த்திப், பின்னர் அவர் அக்கல்லையே புணையாகக் கொண்டு சிவபிரான்றிருவருளாற் கரையேறினதைத் தான் நேரே கண்டு சிவபிரான் றிருவருளை வியந்து அச் சமண்மதம் விட்டுச் சைவசமயந் தழுவினோன்

ஆவன். மகேந்திரவர்மன் மகாபலிபுரத்திற் றுவங்கிய

திருக்கோயிற் றிருப்பணிகளையே அவன் மகன் நரசிம்மவர்மன் முற்றுவித்து, 'மாமல்லன்' என்னுந் தன் பெயரால் அவ்வூரை 'மாமல்லபுரம்' எனவும் வழங்குவித்தான்.8 இவ்வாறு இவ் வேந்தர் இருவராலும் இவர்க்குப் பின்வந்த அரசர் சிலராலும் அமைக்கப்பட்டு இன்றுகாறும் வயங்கும் இத் திருக்கோயில் களும் இவற்றின்கட் செதுக்கப்பட்டிருக்கும் உருக்களும் உலகம் எங்கணும் உள்ள கற்றார் எல்லாரும் வந்து கண்டு 'இவற்றை யொப்பதொரு நுண்ணிய அழகிய உண்மையொடு பிறழாத கற்றச்சுவேலை யாண்டுங் கண்டிலேம்! என்று சொல்லிச் சொல்லி வியக்குந் தன்மையவாய் மிளிர்கின்றன. இங்ஙனங் காண்பாரெல்லாம் புதுமை! புதுமை! என்று வியக்கும் இத் திருக்கோயிற் சுவர்களிலுங் கற்பாறைகளிலுஞ் செதுக்கப்பட் டிருக்கும் உருக்களுங்கூட முற்றும் பாரத கதை நிகழ்ச்சிகளைக் காட்டுனவாயும் பிற சிவபுராணக் கதை நிகழ்ச்சிகளைக் காட்டுவனவாயும் இருக்கின்றனவே யல்லாமல், 'இராம இராவண கதைநிகழ்ச்சி” யை ஒரு சிறிதாயினுங் காட்டு வனவாயில்லை. கண்ணனுடை ய விளையாடல்களைப் பல வகையானுஞ் சுவைபெறக் காட்டும் இக் கற்றச்சு வேலையில் 'இராம இராவண கதை' ஓர் எட்டுணையாயினுங் காட்டப் படாமை பெரிதும்ஆராயற் பாற்றன்றோ! இக் கற்றச்சு உருக்களிலுங் கோயில்களிலுஞ் சிவபிரான் திருமால் என்னும் இருவர் தம் அருள் நிகழ்ச்சிகளும் ஒருங்குவைத்துக் காட்டப்பட் டிருப்பினும் முதன்மையான இடங்களிலுங் கருவறைகளிலுஞ் சிவலிங்க வடிவங்களும் சிவபிரான்றன் றிருவுருவங்களும் அமைக்கப்பட்டிருத்தலால், இவற்றை அமைப்பித்த காலத்திற் சிவபிரானே முழுமுதற் கடவுளாக வணங்கப்பட்டமையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/219&oldid=1588671" இலிருந்து மீள்விக்கப்பட்டது