உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

211

அங்ஙனமாயினுந் திருமாலும் சிவபிரானுக்கு அடுத்த நிலையில் வைத்துத் தொழப் பட்டமையுந் தெள்ளிதிற் புலனாம். இவ்வாறு இருவர் தம் அருள் நிகழ்ச்சிகளும் இனிது காட்டப்பட்டிருக்கும் இக் க் கற்செதுக்குகளில் ‘இராம இராவண கதை’ ஒரு தினைத் துணையுங் காட்டப்படாமையால், நரசிம்மவரும பல்லவ வேந்தன் செங்கோல் ஓச்சயி கி.பி.ஏழாம் நூற்றாண் டி ன் முற்பாதியில் ‘வான்மீகி ராமாயணமும் அதிற் சொல்லப் பட்ட கதையும் இத் தமிழ்நாட்டின்கட் பரவினவல்ல வென்பது நன்கு புலப்படும்.

இனி, முதலாழ்வார் மூவருட் பூதத்தாழ்வார் 'மகாபலி புரம்' என்னுந் 'திருக்கடன் மல்லை'யிற் பிறந்தவரென்பது “கடன் மல்லைப்பூதத்தார்' என்னும் பாயிரச் செய்யுளால் விளங்கா நிற்கும். இன்னும் இவ் வாழ்வாரே,

9919

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே ஏவல்ல எந்தைக் கிடம்20

என்று கூறுதலின், 'மாமல்லன்' எனப் பெயரிய நரசிம்மவரும வேந்தன் தன் பெயரால் இந்நகரத்தை ஆக்கியபின் பூதத்தாழ்வார் இருந்தமை புலனாம். எனவே, நரசிம்ம வருமனது இறுதிக் காலமாகிய கி.பி. 660க்கும் பூதத் தாழ்வாரது காலம் பிற்பட்டதாதல் தெளியப்படும். இனி, இவர் அவ்வரசற்கு எத்தனை காலம் பிற்பட்டவர் என்பதனைத் துணிதற்குங் கருவிகள் வாய்த்துள. முதலாம் நரசிம்ம வருமனுக்கு மகன்இரண்டாம் மகேந்திரவர்மன் ஆவன்; இவனுக்கு மகன் முதலாம் பரமேசுவர்மன் ஆவன்; இவனுக்கு மகன் இரண்டாம் நரசிம்ம வருமன் ஆவன்; இவ்விரண்டாம் நரசிம்ம வருமனுக்கு மகன் இரண்டாம் பரமேசுரவர்மன் ஆவான். இவ் விரண்டாம் பரமேசுவர்மனே காஞ்சி புரத்திலுள்ள 'வைகுண்டப் பெருமாள் கோயிலை' அமைப்பித்தோன் ஆவன்; அவனால் அமைப்பிக்கப் பட்டது பற்றியே அக் கோயில் 'பரமேச்சுரவிண்ணகரம்' எனப் பெயர் பெறுவ தாயிற்று. இம் மன்னன் கி.பி.745 இல் இருந்தமை அவன் வெட்டுவித்த கல்வெட்டு ஒன்றினாற் புலப்படுதலின், இவன் அமைப்பித்த 'விண்ணகரத்’தைத் தம்முடைய செய்யுட் களிற் குறிப்பிட்ட பொய்கையாழ்வார்,22 'பேயாழ்வார்23 என்னும் ருவரும், அவரோ டொருகாலத்தினரான பூதத்தாழ்வாரும்

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/220&oldid=1588673" இலிருந்து மீள்விக்கப்பட்டது