உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் - 23

கி.பி.எட்டாம் நூற்றாண்டின் இடையில் இருந்தமை தேற்றமாம். முதலாழ்வார் பாடிய 'திருவிண்ணகரம்' கச்சியிலுள்ளதே யல்லாமற் பிறவல்லவென்பதூஉம் மேலே 464, 465 ஆம் பக்கங்களில் விளக்கிக்காட்டினாம். அற்றேல், முதலாழ்வார்கள் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்தவரென மேலே கூறிவைத்து, ஈண்டு அவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இடை டையில் இருந்தவராவரெனக் கூறுதல் என்னையெனின்; இரண்டாம் பரமேசுரவர்மன் கி.பி. 713 இல் உயிரோடிருந்தானென்பது புலனாதலின், அதற்குமுன் அவனது அரசாட்சி துவங்கிய காலம் ஏழாம் நூற்றாண்டின் ஈற்றி லிருக்கலாமாகலானும், முதலாழ்வார் மூவரும் அம் மன்னவன் காலத்தும் இருந்தாரெனக் காள்ளுதலுங் கூடுமாகலானும் மேலே அங்ஙனம் உரைத்தாம். எங்ஙனமாயினும் முதலாழ்வார் மூவரும் ரும் கி.பி. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்னும், எட்டாம் நூற்றாண்டின் நடுவுக்குப் பின்னும் இந்திலரென்பதே முடிந்த பொருளா மெனக் கடைப்பிடிக்க.

1.

2.

அடிக்குறிப்புகள்

வியாசபாரதம், ஆதிபருவம், சுலோகங்கள், 81. 101. 105.

See Prof. A.A. Macdonell's 'A History of Sanscrit Literature', -288.

3.

Ibid, p.286.

4.

வான்மீகி இராமாயணம் பாலகாண்டம், 48, 49.

5.

“நீலஜீமூதஸங்காசோ மஹாபுஜ சிரோதர :”வான்மீகி இராமாயணம்.

6.

7.

Dr. John muir's Original Sanscrit Texts, Vol. IV. pp. 441 -491. The Riddle of the Ramayana, By C.V. Vaidya, M.A. LL. B.

8.

The Riddle of the Ramayana. p.183.

9.

10.

குறிஞ்சிக்கலி, 2.

புறநானூறு, 201, 202.

11.

பட்டினப்பாலை. 282.

12. பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்தின் பதிகம்.

13.

14.

புறநானூறு, 93.

அதுவே, 4.

pp. 282

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/221&oldid=1588674" இலிருந்து மீள்விக்கப்பட்டது