உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

L

பாடிய

19. பழைய வடநூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை

இனி, இம் முதலாழ்வார் மூவருந் தாந் திருமான்மேற் பாடல்களில் இரண்டு மூன்றிடங்களிற்றவிர வேறெங்கும்இராம இராவண கதையைக் குறியாமையானும், கண்ணபிரானையும், நரசிங்கன் வாமனன் முதலான ஏனை வடிவங்களையுமே மிகுத்துப் பாடுதலானும் இம்மூவர் காலத்துங்கூட இராம இராவண கதை தமிழ்நாட்டு வைணவர் குழுவிற் பரவி வழங்காமை நன்கு துணியப்படும். எனவே, இராமனைப் பெரிதுபாடி, இராமாயண கதைக் குறிப்புகளைத் தம்முடைய பாடல்களிற் பலகாலும் பலவிடத்தும் பலவாறு எடுத்து விரித்த திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் முதலிய பிறரும் அவரோ டொருங்கிருந் தோரும் எல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப்பின் னிருந்தோராதல் திண்ணமாம்

என்க.

அற்றேல், முதலாழ்வார் மூவர்க்குப்பின் எத்துணை காலங்கழித்துத் திருமங்கையாழ்வார் இருந்தனரெனின்; அதனையும் ஒரு சிறிது விளக்கிக்காட்டுதும். மேலே குறித்த இரண்டாம் பரமேசுரவர்மனுக்குப் பின் தாண்டை மண்டிலத்தில் அரசுபுரிந்தோன் 'நந்திப்போத்தவர்மன்' என்னும் இரண்டாம் நந்திவர்ம பல்லவமல்லனே யாவன்; இவனது 62 ஆம் ஆட்சிக்காலத்தில் 'திருவல்லம் சிவபிரான் திருக்கோயிலிற் சதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றினால்' இவன் அறுபத் திரண்டு ஆண்டுகள் அரசுபுரிந்தானாதல் வேண்டுமென அறிகின்றேம். இவன் கி.பி. 717 முதல் 779 வரையில் அரசு வீற்றிருந்தானென்று வரலாற்று நூலாசிரியர் உறுதிப்படுத்தி யிருக்கின்றனர்.? வடக்கே விந்தியமலையின் தென்பாலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/223&oldid=1588676" இலிருந்து மீள்விக்கப்பட்டது