உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

215

தக்கண நாட்டை அரசாண்ட சாளுக்கிய அரசர்கள், தமிழ்நாட்டில் தொண்டை மண்டிலத்தை அரசாண்ட பல்லவ அரசர்களோடு பகைத்து அவர்களைத் தங்கீழ்ப்படுத்தப் பலகால் முயன்றும் அது நிறைவேறிற் றில்லை. இரண்டாம் புலிகேசன் என்னும் சிறந்த சாளுக்கிய வேந்தனுங்கூட அம் முயற்சியில் வெற்றிபெறாமல், முதலாம் நரசிம்மவருமன் படைத்தலைவரான சிறுத்தொண்ட நாயனாரால் தோல்வி யுற்று மடிந்தான். ஆனால், அச் சாளுக்கியவேந்தன் வழியில் வந்தோனான இரண்டாம் விக்கிரமாதித்தனோ, கி.பி. 741 இற் காஞ்சியின்மேற் படையெடுத்துவந்து 'நந்திப்போத்த வர்மன்' என்னும் நந்திவர்ம பல்லவமல்லனை வென்றான்.' இந் நந்திப் போத்தவர்மனுக்குப் பின், இவன் மகன் 'தந்திவர்மன்' அரசுபுரிந்த காலத்தும், வடக்கேயிருந்த 'ராஷ்ட்ரகூட மன்னனான மூன்றாங்கோவிந்தன் என்பான் கி.பி. 803 இ ல் காஞ்சிமேற் படையெடுத்து வந்து தந்திவர்மனை வென்றான்.4 இவ்வாறு இப்பல்லவ அரசர் இருவருந் தக்கணத்திலிருந்துவந்த சாளுக்கிய இராட்டிர கூட மன்னர்களால் தோல்வியுற் றமையின், இவர்களது பல்லவ அரசு பெரிதும் நிலைகுலைந்து நின்றது; அதனால், இவர்க்கு அடங்கித் திறைசெலுத்தி வந்த தொண்டைநாட்டுக் குறுநிலமன்னர்கள் இவர்க்குத் திறை காடா தொழிந்தனர். சிவபெருமானிடத்து மிக்க அன்பு உடையவரும், சிவபிரானுக்குத் திருக்கோயிற் றிருப்பணி செய்த வருமான இப் பல்லவ வேந்தர் இருவரும் வடக்கிருந்து வந்த மன்னர்களால் தோல்வியுற்றுத் தமக்கு அடங்கிய மன்னருந் தமக்கு அடங்காராய்நிற்கப், பல்லவ ஆட்சியானது நிலைகுலைந்து வருந்துதல் கண்டே, அவ் வேந்தர் பால் அன்புமிக்க சைவசமாயாசிரியரான 'சுந்தரமூர்த்திநாயனார்':

"மண் ணுலகங் காவல் பூண்ட, உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும், பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்

பெருமானைப் பெற்றாமன்றே"

என்று அவர்பொருட்டு இறைவனை வேண்டிப் பாடியருளினார். இரண்டாம் நந்திவர்ம பல்லவ வேந்தன் சிவபெருமான் மாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/224&oldid=1588677" இலிருந்து மீள்விக்கப்பட்டது