உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

216

மறைமலையம் - 23

6

மிக்க அன்பு வைத்தவனென்பது, திருக்கச்சியிலுள்ள 'முக்தீசுவரம்’ என்னும் சிவபிரான் கோயில் அவனால் அமைக்கப்பட் டமையாலும், அக்கோயிற் சுவரில் அவன் செதுக்குவித்திருக்குங் கல்வெட்டினாலுந் துணியப்படும். இவன் மகன் தந்திவர்ம பல்லவனும் அங்ஙனமே சிவபிரான்பால் மிக்க அன்புடையோ னென்பது, திருச்சிராப்பள்ளிக் கோட்டத்திலுள்ள ‘ஆலம்பாக்கத்’தில் அவன் எடுப்பித்த திருக்கோயிற் பெருமான் ‘தந்திலிங்கம்’ எனப் பெயர்கொண்டு விளங்குதலே சான்றாம். சுந்தரமூர்த்தி நாயனார் தாம் அருளிச்செய்த மேற்காட்டிய பாட்டில் ‘பல்லவற்கு’ என ஒருமை வாய்ப்பாட்டால் ஓதாமற் பல்லவர்க்கு எனப் பன்மை வாய்ப்பாட்டால் ஓதித் தந்தையும் மகனும் ஆம் அப் பல்லவ வேந்தர் இருவரையுங் குறிப்பிடுதலானும், “மறுக்கஞ் செய்யும்” என நிகழ்கால வினைச்சொற்பெய்து உரைத்தலானும் அவர், இரண்டாம் நந்திவர்மனது இறுதிக் காலம் முதல், அவன்றன் மைந்தன் தந்திவர்மனது காலத்தின் முற்பகுதி வரையில் இருந்தாரென்று கொள்ளற்பாற்று; அஃதாவ: சுந்தரமூர்த்தி நாயனாரது காலம் கி.பி. 790 முதல் 810 வரையிலாமென்று துணியலாம். இவ்வாறு இந்நாயனா ரிருந்தது ஐம்பதாண்டெனத் துணியப்படுதலாலும், இவர் 'முப்பத்தொண் ணாயிரந் திருப்பதிங்கள்” அளிச்செய்தா ரெனத் ‘திருமுறை கண்டபுராணங்கள்” கூறுதலின் இத்துணைப் பெருந் தொகையின வாகிய திருப்பதிகங்களைப் பற்பல திருக்கோயில்கடோறுஞ் சென்று அருளிச் செய்தற்குக் குறைந்தன முப்பத்தைந்தாண்டு களாயினும் வேண்டுமாதலாலும் இவர் தமது பதினாறாம் ஆண்டுமுதல் இறைவன் திருவருள் பெற்றுப் பாடத் துவங்கியிருந்தாலும் இவர் ஐம்பதாண்டு வரையில் உயிர் வாழ்ந்தாராகல் வேண்டும்; அதனால், இவர் பதினெட்டாண்டு மட்டுமே உயிர் வாழ்ந்தாரெனக் கூறும் ஒரு விடுதிப்பாட்டின் கூற்றுப் பொய்க் கூற்றாதல் பெற்றாம். அதுநிற்க.

L

இனித், திருமங்கையாழ்வார் தாம் பாடிய 'அட்டபுயகரப் பதிகத்திலும் 'பரமேசுரவிண்ணகரப் பதிகத்திலும் உயர்த்துக் குறிப்பிட்ட பல்லவவேந்தன் எவன் என்பது ஆராயற்பாற்று. “தென்னவனை முனையிற் செருவில் திறல்

வாட்டிய திண்சிலை யோன்

பார்மன்னு பல்லவர்கோன்'

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/225&oldid=1588679" இலிருந்து மீள்விக்கப்பட்டது