உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவும்,

6

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

“வில்லவன் நென்மெலில் வெருவர்

செருவேல் வலங்கைப்பிடித்த படைத்திறற் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே”

217

எனவும் இவர் உரைக்குமாற்றால், இவராற் குறிப்பிடப் பட் பல்லவவேந்தன் தன் காலத்திருந்த பண்டியனையும் சேரனையும் போரில் வென்று நிகரற்ற மன்னர் கோனாய் விளங்கினவ ரென்பது நன்குபெறப்படும். திருமங்கை யாழ்வார், முதலாழ்வார் மூவர்க்கும் பின்னிருந்தோராதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும், அம் முதலா;ழவார் மூவரும் கச்சியிலுள்ள 'திருவிண்ணகரை’ ஆக்குவித்த இரண்டாம் பரமேசுவர பல்லவ வேந்தனுக்குப் பிற்பட்டோ ராதலை மேற்காட்டின மாகலானும், திருமங்கையாழ்வாராற் குறிப்பிடப்பட்டோன் அவ்விரண்டாம் பரமேசுரவர்மனுக்குப் பிற்பட்ட பல்லவவேந்தருள் ஒருவனே யாதல் வேண்டும். மேற்காட்டியபடி,இரண்டாம் பரமேசுரனுக்குப் பின் அரசுபுரிந்த இரண்டாம் நந்திப்போத்தரசனும், அவன் மகன் தந்திவர்மனும் வடக்கிருந்து வந்த சாளுக்கிய இராட்டிரகூட அர சர்களால் தோல்வியுற்று வலிகுன்றியிருந்தனராகலின், அவ்விருவரும் பாண்டிய சேர அரசர்களொடு பொருது அவர் தம்மை வென்றாரென்பது பெறப்பட மாட்டாது. ஆனால், இரண்டாம் நந்திப்போத்த வர்மனுக்குப் பேரனும், தந்திவர்மன் மகனும் ஆகிய மூன்றாம் நந்திவர்ம பல்லவனே அங்ஙனம் பாண்டிய சேர அரசர்களைப் போரில் வென்று நிகரற்ற வேந்தனாய் விளங்கினனென்பது அவனைப் பற்றிய கல்வெட்டுக்களானும், அவன்மேற் பாடப்பட்டிருக்கும் 'நந்திகலம்பகத்’ தானும் நன்கு விளங்கா நிற்கின்றது. இவன் திருமாலினிடத்து மிக்க அன்புடைய னென்பதும், இவன் திருக்குடந்தைக்கு அருகில் உள்ள ‘நந்திபுரவிண்ணகரம்’ என்னும் திருமால் கோயிலை ஆக்கின னென்பதும் கல்வெட்டுகளிற் புலனாகின்றன. கல்வெட்டுக் களினால் அறியப்படும் முதலாம் வரகுணபாண்டியன், இந் நந்திவர்மனது தலைநகராகிய திருக்கச்சிமேற் படையெடுத்து வந்தபோது, இவன் அவனைத் தெள்ளாற்றைக் கடந்து வராதபடி தடுத்துப்போர்புரிந்துவென்று துரத்தினமையால் இவனுக்குத் தொள்ளாற் றெறிந்த நந்தி’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/226&oldid=1588680" இலிருந்து மீள்விக்கப்பட்டது