உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

219

விரண்டடிகட்குத், தமிழறிவு நன்கு வாய்ப்பப் பெறாதார் தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொருளுரைத்து இழுக்கினார். இவற்றிற்கு நேர் பொருள் ‘அரசனும், தொண்டைய ரென்னும் பல்லவர்க்குத் தலைவனும் ஆயவன் வணங்காநின்ற நீண்ட முடியினையுடைய திருமாலை, வைரமேகன் என்னும் அவ்வரச னுடைய வலிமையும் புகழும் சூழ்ந்த காஞ்சி நகரின்கண் அட்டபுயகரம் என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளிய முதல்வனை' என்பதேயாம்; முதலிற் பொதுவாகப் பல்லவர்கோன்” என்று சொல்லப்பட்ட அரசனே பின் அரசனே பின்னடியில் அவனுக்குரிய சிறப்புப்பெயரால் 'வைரமேகன்' என்று குறிப்பிக்கப் பட்டான்; இவ்வாறு அன்பின் மிகுதியால் ஒருவரை முதலிற் பொதுவாகவும் பின்னர்ச் சிறப்பாகவும் வைத்து வேறு வேறு வினைகொடுத்து ஓதுதல் தமிழ்வழக்கேயா மென்பது, “ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி”7 என்னுஞ் சூத்திரத்திற்குச் சேனாவரையர் உரைத்தவுரையான் உணர்க. பிறரும் "முனிவன் வந்தான், அகத்தியன் வந்தான்” என எடுத்துக்காட்டுப. எனவே, மேற்செய்யுளில் திருமங்கை யாழ்வார் “தொண்டையர்கோன் வணங்கும்" என்றதும், “வைரமேகன் தன் வலி தன் புகழ்சூழ்ந்த’ என்றதும் ஓர் அரசன் மேலனவேயாம். முதலடியில் உள்ள ‘மாலை' என்பதற்குப் ‘பூமாலை' என்று பொருளுரைத்து இடர் பட்டாரும் உளர்; அச்சொல் இறைவனாகிய 'திருமாலை’யே யுணர்த்திப், பின்னடியிலுள்ள ‘ஆதி தன்னை' என்பதனோடு ஒத்து நிற்றலை யுணரவல்லார்க்கு அதற்குப் பூமாலை யென்று பொருள் கொண்டாருரை போலியுரையாதல் நன்கு விளங்கும்.

6

இனி, ச் செய்யுளிற் குறிப்பிடப்பட்ட ‘வைரமேகன்' என்னும் பல்லவமன்னன் தமது காலத்து இருந்தமை பற்றியே திருமங்கையாழ்வார் வணங்கும் என நிகழ்கால வினைச் சொல்லால் அவனது வணக்கத்தைத் தெரித்தோதினார். இவ் வைரமேகன் என்பான் மூன்றாம் நந்திவர்மனுக்குத் தந்தையான தந்திவர்மனாயிருக்கலாம் என்று ‘வெங்கையர்” என்னுங் கல்வெட்டு ஆராய்ச்சிக்காரர் முதலில் ஐயுற்றுக் கூறினரேனும், பின்னர்க் கிடைத்த கல்வெட்டுக்களைக் கொண்டு அப்பெயர் பூண்ட பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின் இருந்தவனே யென்று அவரே கூறுதலானும், திருவொற்றியூர் 'ஆதிபுரிசுரர் திருக்கோயி'லிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/228&oldid=1588682" இலிருந்து மீள்விக்கப்பட்டது