உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

ஒன்றைக்கொண்டு,

மகன்

மறைமலையம் - 23 அபராஜித அபராஜித பல்லவேந்தன்" ‘வைரமேகன்” ஆவன் என்பது காட்டப்பட்டிருத்தலானும் அபராஜித வேந்தன் வென்றி வேந்தனாய் விளங்கிய கி.பி. 880இல்" அவன்றன் மகன் 'வைரமேகனும்' திருமங்கை யாழ்வாரும் இருந்தமை நன்கு துணியப்படும் நந்திவர்மனுக்கு வரமேகன் என்னும் பெயர் இல்லாமையின் அவனை அவ்வாறு முதலிற் கொண்டது வழுவெனத் தள்ளப்படலாயிற்று. ஆகவே, திருமங்கையாழ்வார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தவ ரென யாம் மேலே யுரைத்தது நிலைபெறல்

காண்க.

யிரந்தோள்கள்

9911

இனி, ஆயிரங் கைகளுடைய வாணன் என்னும் அசுரனொடு பொருதுஅவனைக் கண்ணன் அழித்த கதையைத், திருமங்கையாழ்வார் திருமாலுக்கு ஒரு பெருஞ்சிறப்பாக எழுத்துரைக்கின்றா ராகலின் அஃது ஒரு சிறிது ஆராற்பாற்று. “வாணன், என்பான் தன் மகள் 'உழையின் பொருட்டுச் சிறைவைத்த ‘அநிருத்தன்’ கண்ணபிரானுக்குப் பேரகனாகலின், அவனை விடுவித்தற் பொருட்டுக் கண்ணன் வாணனது ‘சோ’ வென்னும் நகர்மேற் படையெடுத்துச்சென்று அவனோடு பொருதமை 'சிலப்பதிகாரம் ”” 'மணிமேகலை’12 முதலான பழைய தமிழ்க்காப்பியங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றது; அக் கதை உண்மையாயிருக்கலாம். ஆனால் அவ் வாணனுக்கு உளவாகப் பின்னுள்ளோர் கட்டி விட்டகதை அப்பழைய நூல்களுள் ய யாண்டுங் காணப் படாமையின், அத வைணவர்கள் புதிதாகப் புனைந்து பாரதத்தினுட் பின்னர் நுழைத்த பொய்யுரையேயாம். உலக நன்மையின் பொருட்டாகவாதல் தன்னடியவர் நன்மையின் பொருட்டாகவாதல் ஒருவர் ஓர் அரிய செயலைச் செய்தனராயின் அதனை உயர்த்துப் புகழ்தல் ஒக்கும். மற்றுக் கண்ணனோ தன் பேரன் பொருட்டாக வாணனை எதிர்த்தனன்; அது திருமாலுக்குச் சிறப்பாதலும், அதனைப் புகழ்ந்து பேசுதலும் யாங்ஙனம் பொருந்தும்? அஃதெவ் வாறாயினும் ஆகுக. இனி, அங்ஙனங் கண்ணன் அவ் வாணன்மேற் படையெடுத்துச் சென்றபோது, அவ் வாணனது நகரைக் காத்துநின்ற சிவபிரானும், அவர் தம் மகன் முருகவேளும் கண்ணனோடு எதிர்த்துப் போர்புரிந்து

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/229&oldid=1588683" இலிருந்து மீள்விக்கப்பட்டது