உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

223

மதங்களொடுங்கிச் சைவசமயம் பெரிதுங் கிளர்ந்து ஓங்கிப் பொலிந்த காலத்தில், அதனைச் சார்ந்து வைணவ மதம் மெல்ல மெல்லக் கிளர அப்போது முதலாழ்வார்களும், அவர்க்குப்பின் அது பின்னுங் கிளர்ந்து தனிநின்ற காலத்தே திருமங்கை யாழ்வார், குலசேகரர், தொண்டரடிப்பொடி முதலியோரும், அதற்கும்பின் அது சைவத்திற்கு முற்றும் மாறாய் விலகி அதனைப் பகைத்த காலத்தே ‘திருமழிசை', 'சடகோபர்" என்பாரும் இருந்தமை தேற்றமாம்.

மேலும், திருமழிசை யாழ்வார் தம் பாடல்களிற் காணப்படும். 'பற்பநாபன்' 'லச்சை ’, ‘கரன் முரன்’, 'அனந்தசயனன்’, ‘புண்டரீகபாத புண்ணிய கீர்த்தி’, ‘ஆகுலம்’, 'தேநுகன்', ‘பத்தியானபாசநம்', 'பவுண்டிரன்”, ‘மாலிமான், 'கமாலி', 'முகுந்தன்’, ‘அச்சுதனனந்த கீர்த்தி', 'சுவேதன்', 'விசாதி’, ‘காகுத்தன். ’, ‘மதுசூதன்’, 'சிரீதரன்', 'சீரணன்', ‘குணபரன்’ முதலான வடசொற்கள் சொற் றொடர்களும், கீழோர் நமக்குள் வழங்கும் 'வாலாட்டுதல்' என்னும் தமிழ் ஏச்சு உரையும், முதலாழ்வார் பாடல் களினாதல், அவர்க்கு முற்பட்டோர் பாடல்களினாதல் காணப்படாமையானும், இன்னோரன்ன வெல்லாம் பத்தாம் நூற்றாண்டு முதலிருந்த ஏனையாழ்வார்களின் பாட்டுகளின் மட்டுமே காணப்படு தலானும் திருமழிசை யாழ்வார் கி.பி. பத்தாம் நூற்றாண் டின்கண் இருந்தா ரென்பதே தேற்றமாம் என்க. அற்றேல், மேற்காட்டிய வடசொற்களிற் சில ‘திவாகரம்' முதலான பழைய நிகண்டு நூல்களிற் காணப்படுதலின், காணப்படுதலின், அவை பத்தாம் நூற்றாண்டிற் புதிது புகுந்தவையென்றல் யாங்ஙனமெனின்; ‘திவாகரம்' முதலிய நிகண்டு நூலாசிரியர் தமக்கு முன்னும் தங்காலத்தும் வழங்கிய தமிழ்ச்சொற்கள் குறியீடுகள் முதலியவற்றைத் தொகுத்து நூல் எழுதுகின்ற காலத்து, வடமொழியிலுள்ள நிகண்டு நூல்களையும் பார்த்து அவற்றின்கண் உள்ள சொற்கள் குறியீடுகளையும் உ எடுத்துச் சேர்த்து அவற்றை ஆக்கினாராகலின், நிகண்டு நூல்களிற் காணப்படும் வடசொற்கள் குறியீடுளெல்லாம் பழைய தமிழ் நூல்களில் வழங்கின அல்லவென்க. நிகண்டு நூல்கள் தமிழ்ச்சொல் வழக்கிற்கே மேற்கோளாகு மல்லாமல், வடசொல் வழக்கிற்கு மேற்கோளாகா வென்று

உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/232&oldid=1588687" இலிருந்து மீள்விக்கப்பட்டது