உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

  • மறைமலையம் - 23

உணர்ந்துகொள்க. ஒரு வடசொல் தமிழின்கட் புகுந்து வழங்கின் வ காலத்தைத் தெளிதற்கு நிகண்டுகள் அல்லாத ஏனைத்தமிழ் நூல்களே ஆராயற்பாலனவென்க. இவ்வாறு வைணவமதம் சைவ சமயத்துக்குப்பெரிதும் மாறாய் நின்று சிவபிரானை இகழ்ந்து பேசும் அளவின் நில்லாது, சிவபிரானடியவர்கள் அருளிச்செய்த அருந்தமிழ்ப் பாக்கள் நிறைந்து சிவவுருவாய்த் திகழும் செந்தமிழ் மொழியினையும் பாழாக்குதற்கு மடிகட்டி றொடர்கள் கதைகள் முதலியவற்றை ஒரு வரைதுறையின்றித் தமிழின்கட் புகுத்தற் தொடங்கிய காலம் கி.பி.பத்தாம் நூற்றாண்டு துவங்கியேயாம். வைணவப் புலவர்களால் இங்ஙனந் தமிழ்மொழி பாழாக்கப் பட்டு வருகின்றமைக்கு, ஆழ்வார்களின் பாடல்களுக்கு உரையெழுதிய புலவர்கள் அவ் வுரையில் வரைதுறையின்றி வடசொற்றொடர்களை இணைத்து அழகில்லா அவ் வுரை நடைக்கு ‘மணிப்ரவாளம்' என ஒரு பெரும்பெயர் சூட்டி விட்டமையும், இன்றுகாறும் வைணவப் புலவர்களா யிருப்போர் தமிழில் வடமொழிக் கலப்பு மிக வைத்து எழுதுதலுமே சான்றாகும். இன்னுஞ் சைவசமயம் ஒன்றுமே செந்தமிழ் மொழிக்கும் அது வழங்கும் மக்கட்கும் பேருரிமையாம் என்பதும், அது நன்கு கண்டே வடக்கிருந்து வந்த பௌத்தர், சமணர், வைணவர் முதலான பிறமதத்தவர் தத்தங் காலங்களில் ஏராளமான வடசொற்களைப் புகுத்திய தமிழில் தத்தஞ் சமயநூல்களை எழுதிச் சைவசமயத்தைக் கீழறுத்து வரலாயினரென்பதும், பிற்காலத்துச் சைவர்களும் அவர் வழிப்பட்டு இடையிடையே வடசொற்களையும் வடமொழி வழக்குகளையுந் தாமெழுதிய தமிழ்நூல்களிற் சிறுபான்மை தழுவி வரைந்தனராயினும் ஏனைப் பௌத்தர் சமணர் வைணவர் முதலான அவரைப்போல் அதனை அத்துணைக் கெடாமல் அதனை இன்றுகாறும் அழகு பெறவே காத்து வழங்கி வருகின்றன ரென்பதற்குச் 'சிவஞானமுனிவர், இராமலிங்க சுவாமிகள்’, ‘சபாபதிநாவலர்’ ‘ஆறுமுகநாவலர்’ முதலான செந்தமிழ் வாணரின் செய்யுளுரை நூல்களே சான்றாமென்பதும் மறவாமற் கருத்திற் பதிக்கற்பாலன. இவ் வடமொழி தென்மொழிக் கலப்பினை ஆராய்ந்த மட்டில் நடுநிலை திறம்பாத சீநிவாச ஐயங்காரும், "தமிழ்ச்செய்யுளில்

நின்று வடசொற்கள் சாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/233&oldid=1588688" இலிருந்து மீள்விக்கப்பட்டது