உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

2

225

15

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் சைவர்கள் தமக்கு உரிய அருள் நூல்கள், வைணவர்கட்கு உரியவற்றினும் ஏறக்குறைய மும்மடங்கு மிகவுள. சம்பந்தருடைய பதிகங்கள் மட்டுமே, பன்னீராழ்வார்களும் ஒருங்கு சேர்ந்து செய்த பாடல்களின் அளவு உள்ளன; இவையெல்லாம், தென்னாட்டின்கண் உள்ள தமிழர்க்குட் சைவசமயமே மிக்கு வழங்கினமையே மெய்ப்படுத்தா நிற்கும் என்றும், “தேவாரப் பதிகங்கள் தமிழ்ச் சைவர்களால் தொகுக்கப்பட்ட பெருந் தொகை நூலாயிருந்தும், தமிழ் நாட்டின் கண் உள்ள ஸ்மார்த்தப் பார்ப்பனரால் அவை அவ்வளவு நன்குமதிக்கப் படுவதில்லை. சைவக்கொள்கை யானது ஸ்மிருதிகளிற் சொல்லப்பட்ட சடங்குகளை மிகவும் பொருட்படுத்தவில்லை சிவபிரானிடத்துத் தனியன்பு வைத்து ஒழுகுதலையே தனக்கு ஓர் அடிப்படை யாய்க் கொண்டு, அது சாதிவேற்றுமையின்றி எல்லா இனத்தவரையும் தன்னகத்தே தழுவிக் கொண்டது. சைவக் கோட்பாட்டின் இப் பொது நிலையானது சாதிப்பற்று வாய்ந்த பார்ப்பனருக்குப் பிடியாமையால் இஃது அவர்க்குள் மிக்கு வழங்கிற்றிலது. பெரிது ஒத்த இயற்கையவான இவ் விருவகைத் தமிழ்நூல்கட்கு உள்ள மதிப்புவேற்றுமையால், சிவபிரானையே வழிபடுவாரான தமிழர் பெரும்பாலார் தமக்குள் வைணவமதத்தைப் பரப்புதற்கு முன்னிருந்த வைணவ ஆசிரியர் மிகவுங் கவலையெடுத்தனர் என்றும், வ்வுண்மையை மறையாமல் நன்கெடுத்துக் காட்டினர். இவ்வாற்றால், 'பௌத்தம், 'சமணம்', 'மாயாவாதம்', வைணவம்’ முதலிய மதங்கள் தமிழ்நாட்டவர்க்கப் புறம்பாதலும், அதுபற்றியே அவை பொதுநூலாகிய‘சூடாமணிநிகண்டு'ள்ளும் ‘புறச்சமயம்’ என வைத்து ஓதப்படுதலுங் கண்டுகொள்க.

நி

15

9914

இங்ஙனமாகத் தமிழ்மொழியில் வைணவர் சொற்களைப் பெரிது புகுத்தவும், சைவசமயத்தையும் சிவபிரானையும் பெரிது இகழவும் துவங்கியகாலம், தமிழ்ச் சங்கப் புலவர்களின் இறுதிக்கால வெல்லையாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்றாதல், சைவ சமயாசிரியர் தோன்றிப் பௌத்த சமணமதங்களின் குறும்பை யடக்கித் திகழ்ந்த கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் வரையிற் சென்ற காலத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/234&oldid=1588689" இலிருந்து மீள்விக்கப்பட்டது