உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

  • மறைமலையம் - 23

இடைப்பட்டதென்றாதல் கொள்ளுதற்கு ஏதொரு சான்றும் இல்லாமையின், அக்காலம் சைவ சமயாசிரியர் நால்வரிற் பின்னிருந்தோரான சுந்தரர்மூர்த்தி நாயனார்க்கும் பிற்பட்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஈறு அல்லது பத்ாதாம் நூற்றாண்டின் தொடக்கமுதல் நிகழலாயிற்றென்பதே தேற்றமாம். ஆகவே, கண்ணன் வாணனொடு புரிந்த போரிற் சிவபிரானும் முருகவேளும் வந்தெதிர்த்துத் தோற்றோடினர் என்னும் பெரும்புளுகுரை திருமங்கையாழ்வாரது காலம்முதற் படைக்கப்பட்டுப் பாரதத்தின் இடையே செருகப்பட்டதாதல் தெற்றென விளங்காநிற்கும்.

அந்

அற்றேல், அக் கதை பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்நூல்களிற் காணப்படாமையின் அஃது நூற்றாண்டிற்குமுன் தென்றமிழ்நாட்டின்கண் வழங்கிற்றிலது என்பது மட்டுந்தான் பெறப்படுமே யல்லாமல், அது வடநாட்டினும் பழைய வடநூல்களினும் வழங்கிய தில்லை யென்றல் பெறப்படாதாலெனின்; தமிழ்நாட்டினும் பழைய தமிழ்நூல்களினும் மட்டுமேயன்றி, வடநாட்டினும் பழைய நூல்களினுங்கூடச் சிவபிரானை இகழ்ந்துரைக்கும் இகழ்ச்சியுரை ஒருசிறிதுங் காணப்படாதென்பதூஉம், அவற்றுள் எங்குஞ் சிவபிரானது முழுமுதற்றன்மையும் அவனே பிறப்பு இறப்பில்லாத் தனித்தலைமைப் பெருங் கடவுளாதலும் வலியுறுத்துரைக்கப்பட்டிருக்கின்றன வென்பதூஉம், விஷ்ணு முதலிய ஏனைத்தேவர்களெல்லாம் பிறப்பு இறப்புக்கள் உடையராகலின் அவர் எல்லாம் முழுமுதற் கடவுளாகார் என அந் நூல்களே நன்கெடுத்துக் காட்டுகின்றனவென்பதூஉம் ஈண்டு ஒருசிறிது விளக்குதும்.

L

வடமொழியிற் பழைய நூல்களென்று அம் மொழி நூல்களை நன்காராய்ந்து உணர்ந்த மாப்பெரும் புலவோர் கொண்டவை பின்வருவனவேயாகும். புராணங்களுள் மிகப் பழைமையானவை 'மற்சபுராணம்’, 'வாயுபுராணம்’, என்பவைகளே யாம்; ரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்தனவென்பதற்குத் தக்கசான்றுகள் உள" சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளையே இவையிரண்டும் விரித்துரைக்கின்றன; மற்சபுராணத்திற் சிவபிரான்

வைகள் கி.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/235&oldid=1588690" இலிருந்து மீள்விக்கப்பட்டது