உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

L

227

முப்புரங்களையுங் காமவேளையும் நெற்றிக் கண்ணால் எரித்தமையும், கார்த்திகேயன் பிறப்பும், தாரகாசுரனை அழித்தமையும் பிறவுமாகிய வரலாறுகள் சொல்லப்படுகின்றன. வாயுபுராணத்திற் றக்கன்வேள்வி அழிப்புண்டமையும், யோகஞ்செய்தலால் வருஞ் சிறந்த பயனும், யோகிகள் சிவபிரான் திருவருட்பேற்றினை யடைதலும், சிவபுரத்தின் மாட்சிகளும் விரித்துரைக்கப் படுகின்றன. இவற்றிற்குப்பின் இவற்றை யடுத்துத் தோன்றிய ‘அக்நிபுராணம்', 'இலிங்க புராணம்', ‘ஸ்கந்தபுராணம்’, ‘வாமநபுராணம்’, ‘கூர்மபுராணம்', 'தேவிபாகவதம்’, 'பிரமாண்டபுராணம்', 'மார்க்கண்டே புராணம்', 'பவிஷ் யோத்தர புராணம் முதலியனவும்

புராணம்

சிவபிரான்றன் முழுமுதற் றன்மைகளையும் உமைப்பிராட்டியின் மாட்சிகளையுமே எடுத்துப் புகலுகின்றன. இவையல்லாத 'விஷ்ணுபுராணம் பிரமபுராணம் பத்ம 'விஷ்ணுபாகவதம்’, நாரதபுராணம்”,‘பிரமவைவர்த்தபுராணம்' 'வராகபுராணம்’, ‘கருடபுராணம்', முதலியனவெல்லாம் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இயற்றப்பட்டன வாகும். வைணவ புராணங்களில் முற்பட்டதாகிய 'விஷ்ணு புராணமே' கி.பி. 1045 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகும் என்று அதனை நன்கு ஆய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆங்கில ஆசிரியர் உவில்சன் என்பவர் இனிது விளக்கிக்காட்டி யிருக்கின்றாராகலின்,” ஏனை வைணவ புராணங்களெல்லாம் வைணவம் சைவசமயத்திற்கு முற்றும் மாறாய்த் தோன்றி அதனைப் பழிக்கத் துவங்கிய பின் வைணவப் புலவோராற் புதியவாய்ப் புனைந்து கட்டப்பட்டனவேயாதல் தெள்ளிதிற் புலனாம். மேற்காட்டிய வைணவபுராணங்களுட் ‘பத்ம புராணம்' இற்றைக்கு முந்நூறாண்டுகளுக்கு முன்னும், 'வைணவ பாகவதம்' தேவகிரி அரசன் மகாதேவற்கும் அவற்குப்பின் வந்த இராமதேவற்கும் அமைச்சனான ஹேமாத்திரியின் அவை யிலிருந்த போபதேவரால் அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னும், 'நாரதபுராணம்' இருநூறாண்டு களுக்கு முன்னும், வவர்த்த புராணம் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னும் வராக புராணம் அறுநூறாண்டுகளுக்கு முன்னும் ‘கருட புராணம்’ தொளாயிர ஆண்டுகளுக்கு முன்னும் இயற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. திருமங்கையாழ்வார் இருந்த கி.பி.

பிரமவைவர்த்தபுராணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/236&oldid=1588691" இலிருந்து மீள்விக்கப்பட்டது