உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் - 23

பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இப் புராணங்கள் புனைந்துரைக்கப்பட்டன. பழைய பதினெண் புராணங்களிற் சேர்ந்த சிலவற்றின் பெயர்களையே வத்து

இப்

புராணங்களை வைணவர்கள் புனைந்து கட்டிவிட்டமையால், ஆராய்ந்து பார்க்கும் அறிவுமதுகை யில்லாதார் இவ் வைணவ புராணங்களைப் பழைய பதினெண் புரணங்களிற் சேர்ந்தனவாகப் பிறழக்கொண்டு டர்ப்படுவர்.

வ்

மயங்கிப்பெரிதும்

உண்மையான் நோக்குவாரெல்லாம் இவை கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் பழைமையைப் பலவாறு திரித்துப் புதுப்பொய் பல புகுத்திச் செய்யப்பட்டன வாதலை நன்கு உணராநிற்பர்!8 இவ் வைணவ புராணங்களுக்கு முற்பட்டனவாக மேலெடுத்துக் காட்டிய மற்சம்,வாயு, அங்கி, இலிங்கம், காந்தம், வாமநம், கூர்மம், தேவிபாகவதம், பிரமாண்டம், மார்க்கண்டேயம், பவிடியோத்தரம் முதலியனவெல்லாம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் ஆக்கப்பட்ட பழைய காலத்துப் புராணங்களாய்ச் சிவபிரான் அருட்டிறங்களையும்அம்மையின் அருட்செயல் களையும் எடுத்துரைத்து அவரே முழுமுதற் கடவுளாதலை வலியுறுத்துகின்றன. இவை தம்முள் விஷ்ணுவை முதற் கடவுளாக உயர்த்திச் சிவத்தை இழிக்கும் பகுதி ஓர் எட்டுணையுங் காணப்படமாட் ாது. அதனாற், சைவசமயா சிரியர் காலத்தும், அவர்க்கு முன்னே கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தும் சிவபிரானும் அம்மையுமே எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளாக வணங்கப்பட்டமை தெற்றென விளங்கா நிற்கும்.

இனிப்புராணங்களுக்கு முற்பட்ட பழைமையுடையது 'வான்மீகி இராமாயணம்' ஆகும். இந் நூலின் பழைய பகுதிகளில் இராமன் திருமாலின் பிறப்பாகக் கொள்ளப்பட வில்லை யென்பதூஉம், அவன் ஆண்மையிற் சிறந்த ஓர் அரசனாகவே வைத்து உரைக்கப்பட்டன னென்பதூஉம் மேலே விளக்கிக் காட்டினாம். ஆனால் இவ் விராமாயணத்திலேயே பல இடங்களிலும் தேவர்கள் சிவபிரானையும் உமைப் பிராட்டியையும் வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறுகள் பல சொல்லப்படுகின்றன. இதன் ‘பாலகாண்டம்', 37ஆம் இயலில், தேவர்கள் அனைவரும் சென்று சிவபிரானையும் அம்மையையும்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/237&oldid=1588692" இலிருந்து மீள்விக்கப்பட்டது