உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

10. பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் ஒடுங்கியதும்

பெருமானொடு

இனி, மாணிக்கவாசகப் பெருமான் தில்லைமா நகரிற் சென்று பொன்னம்பலக் கூத்தனை வணங்கியபடியாய்த் தவஞ் சய்து கொண்டிருந்த நாட்களிற் சிவபிரான் திருத்தொண்டர் ஒருவர் இலங்கைத் தீவுக்குச் சென்றமையும், அங்கே அவரை எதிர்ப்பட்ட புத்தர்களின் குரு ஒருவர் சைவ சமயம் பரவுதலைப் பொறாராய்த் தம் இலங்கை மன்னனுடன் தில்லைக்குப் போந்து மாணிக்கவாசகப் வழக்கிட்டமையும், வழக்கிடுதற் பொருட்டுக் கூட்டப்படட அப்பேரவைக்களத்திற் சோழ வேந்தன் தலைவனாய் விளங்கி வீற்றிருந்தமையும், இலங்கை மன்னன் அச்சோழனுக்குக் கீழ் அடங்கினவனாதலின் திறை கொணர்ந்து வைத்து அவ் வேந்தனை வணங்கினமையும் மேலே "மாணிக்கவாசகர் வரலாற்றிற்” கடவுண்மா முனிவர் அளிச் செய்த திருவாதவூரடிகள் புராணத்தில் உள்ளவாறே யெடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றேம். தமிழ்மொழி பேசுந் தொண்டர் ஒருவர் அந் நாளில் இலங்கைக்குச் சென்று அங்குள்ள புத்தர்க்குப் “பொன்னம்பலத்"தின் பெருமையை எடுத்துச் சொன்னார் என்பதனால், அக் காலத்தில்

இலங்கையின் வடபகுதிகளில் தமிழ் மொழி வழங்கினமை அறியப்படும். இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே, அஃதாவது கி.மு. 177ஆம் ஆண்டு முதல் 155 ஆம் ஆண்டுவரையில் சேனன், குத்திகன் எனப் பெயரிய தமிழரசர் இருவர் ஒருவர்பின் ஒருவராய் இலங்கையின் தலைநகராகிய அநுராதபுரத்திற் செங்கோல் செலுத்தின ரெனவும், கி.மு. 145 முதல் 101 வரையில் ஏளாரன் என்னுந் தமிழ்மன்னன் தான் பௌத்தமதத்தைத் தழுவாதவனா யிருந்தும், எல்லார்க்கும் பொதுவான செங்கோலரசினை எல்லாரும் உவக்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/24&oldid=1588238" இலிருந்து மீள்விக்கப்பட்டது