உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மிகவுஞ்

மறைமலையம் - 23

சவ்வையாக

இவன்

நடாத்தினனெனவும், சோழநாட்டிலிருந்து வந்தவனெனவும், பின்னர்க் கி.மு.44 முதல் 26 வரையில் 'புலகத்தன்', 'பாகியன்', 'பனையமாவன்', 'பிளையமாவன்’, ‘தாடிகன்’ எனப் பெயரிய தமிழ் மன்னர் ஐவர் அரசாண்டனரெவும் இலங்கைப் பௌத்த அரசர் வரலாறு கூறும் மகாவம்ஸம் புகலாநிற்கும்.

2

இங்ஙனங் கிறித்து பிறப்பதற்கு முன் நூற்றாண்டுகளிலே யன்றி, அவர் பிறந்த பின் நூற்றாண்டுகளிலும் தமிழரசர் பலர் இலங்கை அநுராதபுரத்தில் ஆட்சி செலுத்தினர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் வரையில் தமிழ்மன்னர் அறுவர் அரசாண்டனரெனத் திருவாளர் அருணாசலம் அவர்கள் தாம் எழுதிய 'இலங்கை வரலாற்றின் குறிப்புகள்3 என்ற நூலிற் காட்டியிருக்கின்றார்கள். திரும்பவுங் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலுந் தமிழரது ஆட்சி ஓங்கியிருந்த தென்றும் அதனாற் பௌத்த மன்னர்கள் தமது பழைய தலைநகராகிய அநுராதபுரத்தை தமிழரசர்க்கு ஒப்படைத்துவிட்டுத் தாம் ‘புலத்திய நகரம்' என்பதன் சிதைவாகச் சிங்கள மொழியில் வழங்கும் ‘பொலன்னுருவா' என்பதனைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமக்குத் தலைநகராக ஆக்கிக்கொண்டார்களென்றும் அவர்களே அந்நூலில் நன்கெடுத்துச் சொல்லினர்.+ ஆகவே, தமிழும் தமிழரசர்களும், தமிழ் மக்களும், அவர் தம் வழக்க வொழுக்கங்களும் அவர்தம் சமயக்கொள்கைகளும் ரண்டாயிர ஆண்டுகட்கு முற்றொட்டே இலங்கைத் தீவின் வடபகுதிகளிற் பரவத் தொடங்கி இற்றைநாள் வரையுந் தொடர்ந்து வந்திருத்தல் நன்கறியக்கிடத்தலின், மாணிக்க வாசகர் காலத்தில் தமிழ்மொழி அங்கே பரவியிருந்தமை தேற்றமாம் என்க. அதனால், அங்கே சென்ற சிவத்தொண்டர் பொன்னம்பலத்தின் விழுப்பங்களை தமிழ்மொழியில் எடுத்துச் சொன்னாரென்பது பொருத்தமே யாதல் தெளிக.

6

னி, அடிகள் மூன்றர்ம நூற்றாண்டின்கண் இருந்தவ ராயின், அக்காலத்திற் றென்னாடெங்கணும் பரவியிருந்தன வாகியச் 'சிலப்பதிகாரம்’, 'மணிமேகலை' என்னும் இருபெருங் காப்பியங்களானுந் துணியப்படும் பௌத்தசமயக் குரவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/25&oldid=1588243" இலிருந்து மீள்விக்கப்பட்டது