உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

231

ன்னும், அப் பாலகாண்டம், பாலகாண்டம், 45ஆம் இயலில், தேவர்களுந் தைத்தியரும் சாவாமருந்தாகிய அமிர்தம் பெறும் பொருட்டு ஒருங்குகூடிச்சென்று திருப்பாற் கடலைக் கடைய, அதன்கண் வாசுகி உகுத்த நஞ்சு பெருகி அங்கே குழுமிய தேவர்கள்முதன் அனைவரையும் அழிக்கப்புக்கமை கண்டு, அவர்களெல்லாரும் பெரிதும் நடுக்குற்றுச் சிவபிரானை அடைக்கலம் புகுந்து “எல்லாம் வல்ல பெருமானே, எம்மைப் பாதுகாத்தருள்க, எம்மைப் பாதுகாத்தருள்க!" என்று குறையிரந்தமையும், அங்ஙனமே விஷ்ணுவும் சிவபிரானை நோக்கித் “தேவரீரே, எல்லாத் தேவர்கட்கும் முன்உள்ளீர், நீரே எல்லாத் தேவருள்ளும் சிறந்த தலைவராயினீர், ஆதலால் எல்லார்க்கும் வருவதில் முதற்பங்கு தேவரீரையே சாரற் பாலதாகலிற், பெருமானே, முதற்கண் வந்ததாகிய இந் நஞ்சினைப் பருகியருளுக என வேண்டினமையும், அவ் விருதிறத்தார் கலக்கத்தையுங் கண்டு இரங்கிச் சிவபிரான் அந் நஞ்சினையே அமிர்தமாகப் பருகி அதனாற் றான் ஏதுந் துன்புறாது தேவர் துயர்களைந் தருளினமையும் நன்கெடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.

77 20

ன்னும், அதன் 96 ஆம் இயலில், தக்கன் வேட்ட வேள்விக்கட் கூடிய தேவர்களெல்லாருந் தம்மைப் பெரியராகக் கருதி இறுமாந்து, முதலிற் சிவபிரானுக்குச் சேர்ப்பிக்கற் பாலதாகிய அவியுணவினைச் சேர்ப்பியாது விட, அவர்களது இறுமாப்பை ஒழித்துத் தனது முதற்கடவுட் டன்மை காட்டி அவர்க்கு நல்லறிவு கொளுத்தல்வேண்டிச் சிவபிரான் அவர்களைத் தலையறுத்தும், உடலங்களைப் பிளந்தும் றுப்புக்களை வெட்டியும் ஒட்டித்தானே வெற்றி முதல்வனாய்த் திகழ்ந்துநிற்பப்,பின்னர் அத்தேவர்கள் எல்லாரும் நல்லறிவு பெற்றுத் தமது சிறுமையும் எல்லாம் வல்ல அப் பெருமானின் பெருமையும் உணர்ந்து அவனை வழுத்த, அவன் அவர்க்கிரங்கி மீண்டும் அவர்தம் உடலங்களையும் பழுதுபட்ட உறுப்புகளை யுஞ் சீர்திருத்திக் கொடுத்தருளி னமையும் நன்கு விளக்கி நுவலப்பட்டிருக்கின்றது.

இனி, வான்மீகி இராமாயணத்திற்குப் பன்னெடுங் காலம் முற்பட்டனவாகிய மாபாரதப் பழம் பகுதிகளிலுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/240&oldid=1588695" இலிருந்து மீள்விக்கப்பட்டது