உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

9926

239

வணங்கினதும் பலவிடங்களினும் எடுத்து கூறாநிற்கின்றது.25 பிராமணங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் உண்மையை அளந்தறிந்த ஆங்கில ஆசிரியரான கீத் என்பவர், “ஐதரேயத்திற் சிவபெருமானே தனது உருத்திர வடிவிற் பெரிய தெய்வம்; அங்ஙனமே சதபதத்திலும், வாஜசநேய சம்ஹிதையின் பிற்பகுதிகளிலும், அதர்வ வேதப் பகுதிகளிலும் அவரே முதற்பெருந் தெய்வம்’ என்று ஐதரேய ஆரணியகத்தின் முகவுரையிலும் இம்மெய்ம்மையை முடித்துக் கூறுதலுங் கருத்திற் பதிக்கப்பாற்று. சுக்லயஜுர்வேதத்தின் கண்ணதாய்த் தலைசிறந்து விளங்கும் சதருத்ரீயம் முற்றிலும் சிவபெருமான் ஒருவனே எல்லாத் தேவர்கட்கும் முதல்வனாய், எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா இரக்கமும் எல்லா இன்பமும் ஒருங்குடைய முழுமுதற் கடவுளாய் வைத்து வழுத்தப்படுதல் பெரிது நினைவுகூரற் பாலதொன்றாம்.

L

னி, வடமொழி நூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்குவேதத்தின் முதன் மண்டிைலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலுஞ் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்குந் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப்போலவும் பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும், கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லாத் தேவரினும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க; அங்ஙனமே அதன் 114 ஆம் பதிகமும் சிவபிரான் ஒருவனே முமுமுதற் கடவுளா தலைத் தேற்றுவ தோடு, அவன் சடைமுடியுடையோனாய், உருத்திரகணங் களுக்குத் தலைவனாய், அருளிரக்க ஈகையில் மிக்கோனாய், வேள்விப் பயனை நிறைவேற்று வோனாய், ஞானியாய் (அறிவோனாய்), உயர்ந்த மருந்துகளைக் கையில் வைத்திருப் போனாய், இறப்பிலியாய்த் திகழுமாற்றை வகுத்துரைக் கின்றது; இரண்டாம் மண்டிலத்து 33 ஆம் பதிகமும் அங்ஙனமே சிவபிரான், தேவர்கள் எல்லாரினும் மிகச் சிறந்தோனாதல் தெரிப்பதுடன் அவனே வலிமையின் மிக்கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/248&oldid=1588704" இலிருந்து மீள்விக்கப்பட்டது