உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 23

எல்லாரினும் வலிமையிற் சிறந்தோனாவன் எனவும், அவனே சாந்தனாய் (அமைதி மிக்கவனாய்) அடியார்க்கு எளியனாம் எனவும், ஏனைத்தேவர்களாற் போதருந் தீமைகளையெல்லாந் துடைப்பவனாம் எனவும், அவனைவிட ஆற்றலின் மிக்கது எதுவும் இன்றெனவும், புகழ்மிக்கோனாய் என்றும் இளையோனாய்த் தன் தேர்மீது அமர்ந்து முப்புரங்களை அழித்தக்காற் பெரிதும் அஞ்சத்தக்கோனாய்க் கிளர்ந்தனன் எனவும் அறிவுறுத்துகின்றது; அதன் ஐந்தாம் மண்டிலத்து 52 ஆம் பதிகம் உருத்திரனே மருத்துக்களுக்குத் தந்தையாவன், அவன்றன் காதற்கிழத்தியாகிய பிரிCG என்னும் உமைப் பிராட்டியே அவர்கட்குத் தாய் ஆகுவள் என்கின்றது; அதன் ஆறாம் மண்டிலத்தில் 16ஆம் பதிகமானது உக்கிரனாகிய சிவபிரான் மூன்று பட்டினங்களைப் பொடிசெய்தான் என நுவல்கின்றது; அதன் 41 ஆம் பதிகம் உருத்திரனே உலகிற்கு முதற்கடவுள் (புவநஸ்யபிதரம்) என்கின்றது; அதன் ஏழாம் மண்டிலத்து 46 ஆம் பதிகம் உருத்திரன் தன்வயத்தனாய் நிற்பவனே யன்றி (ஸ்வதாவ்நே)ப் பிறரைச் சார்ந்து பிறர் துணையை நாடி நிற்பவன் அல்லன் என்கின்றது; பத்தாம் மண்டிலத்து 66ஆம் பதிகம் உருத்திரன் தன்னைச் சூழ்ந்த அடியரான உருத்திரர் என்னுந் தேவகூட்டத்தோடும் போந்து அடியார்க்கு எளியனாய் அருள்வழங்குவோன் என்கின்றது; அதன் 136 ஆம் பதிகமானது, சடைமுடியோனான (கேசி) சிவபிரான் தீ மண்டிலம் மறுமையுலகங்கள் எல்லாவற்றையுந் தாங்குவோன் என்பதூஉம், அவன் வெறுவெளியாய்ச் (சிற்றம்பலமாய்) நோக்கப்படுவோன். அவனே ஒளிவடிவினன் (கேசிஇதம்ஜ்யோதிர்) என்பதூஉம், அவன் முனிவர்க்கெல்லாம் முனிவன் (தக்ஷிணா மூர்த்தி) ஆவன் என்பதூஉம், அவன்தன் உருத்திருகணத்திலுள்ள ஒருவரால் நஞ்சினை வருவித்து அதனைப் பருகினன் (கேசிவிஷஸ்ய பாத்ரேணயத் ருத்ரேணாபிபத்ஸஹ) என்பதூஉம்

நீர்மண்டிலம்

ம்

மை

தெரித்துரைத்தல் காண்க. இவ்வாறு பண்டை வடநூலாகிய இருக்குவேதத்தி னுள்ளேயே சிவபிரான் ஒருவனே முழுமுதற் கடவுளாதலும், அவனே முப்புரங்களை அழித்ததும், அவனே 'விஷபானம்' (நஞ்சைப் பருகுதல்) செய்ததுந் தெளித்தோதப் பட்டமையானும் இருக்கு வேதத்திற்குப்

பின்வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/249&oldid=1588705" இலிருந்து மீள்விக்கப்பட்டது