உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2×

241

அதர்வவேதமும், பிரமணங்கள் உபநிடதங்களும் அவனையே முழுமுதற் கடவுளாய் வைத்துத் திரிபுரசங்காரம் விஷபானம் முதலான அரும்பெரு நிகழ்ச்சிகளை அவன் மேலனவாகவே உரைத்தலானும், இவ்வாறே விஷ்ணுவை அப் பழைய நூல்கள் முழுமுதற் கடவுள் நிலையில் வைத்தாதல் மேற்குறித்த 'திரிபுரசங்காரம்' முதலிய அரும்பெரு நிகழ்ச்சிகளை விஷ்ணுவின் மேலனவாக வைத்தாதல் யாண்டும் உரைப்பக் காணாமை யானும், இப் பழைய நூல்களின் கருத்துக்கு முழுதும் ஒத்தே இவற்றிற்குப் பின்வந்த 'மாபாரதம்

ராமாயணம்' 'புராணங்கள்' எல்லாம் சிவபிரானையே முழுமுதற் கடவுளாக நிறுத்தி ஓதுதலானும். இம் மாபாரதம் முதலான பின்நூல்களிற் சிவபிரான்றன் முதன்மைத் தன்மைகள் கூறும் பகுதிகளே பழைமையான உண்மைப் பகுதிகளா மெனவும், அவற்றுக்குமாறாக விஷ்ணுவையும் அவன்றன் அவதாரங்களாகக் கண்ணன் இராமன் முதலாயினாரையும் உயர்த்திச் சிவபிரானை இகழ்ந் துரைக்கும் பகுதிகளெல்லாம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதற் றோன்றிய வைணவப் புலவர்கள் பொய்யாகப் புனைந்து கட்டி அப் பின்னூல் களின்கண் இடையிடையே நுழைத்தனவாகு மெனவும் பகுத்துணர்ந்து தெளிக. இதுகாறும் ஆராய்ந்து காட்டப்பட் வடமொழி வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், L மாபாரதம், வான்மீகி இராமாயணம், மற்சபுராணம், வாயுபுராணம், இலிங்கபுராணம், தேவீபாகவதம் முதலாக ஒன்றினொன்றுயர்ந்த பழைய வடநூல்களில் எங்குங் காணப்படாத பொய்க்கதைகளும் விஷ்ணுவையும் அவர் தம் அவதாரங்களையும் உயர்த்துக் கூறிச் சிவபிரானை இகழ்ந்துரைக்கும் உரைகளும் மலிந்த விஷ்ணுபுராணம், பாத்மோத்தரம், வைணவபாகவதம், பிரமாண்ட புராணம், இராமோபநிஷதம், நாராயணோப நிஷதம், ஆத்மோபநிஷதம், ஆங்கீரஸ உபநிஷதம், மகோபநிஷதம், பைங்களோபநிஷதம் முதலாயினவும் மற்றும் இவை போல்வனவும் மதச்சண்டை விளைத்து இந் நாட்டுமக்களின் ஒற்றுமை குலைத்தற்காகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் வந்த வைணவப்புலவர்களாற் புதியவாய்க் கட்டப்பட்டனவாதலால், அவை தம்மை நம்பி அறிவுடையோர் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/250&oldid=1588706" இலிருந்து மீள்விக்கப்பட்டது