உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் - 23

L

வணக்கத்தைக் கைவிடார். பகுத்தறிவில்லாப் பொய்ப் பற்றுடைய புல்லறிவினரே மிகக் பிற்பட்ட காலத்தெழுந்த இப் பொய்ந்நூல்களை நம்பி, எல்லாம் எல்லாம் வல்ல இறைவனை வழிபடாமற், பிறப்பு இறப்புகளிற் கிடந்து உழலும் நம் போன்ற மக்களைத் தெய்வங்களாக வணங்கித் தம் பிறவிப் பயனை இழப்பரென விடுக்க. ஆதலாற், கண்ணன் வாணனொடு புரிந்தபோரிற் சிவபிரான் வந்தெதிர்த்துத் தோற்றோடினன் என்னுங் கதை,அவ் வாணன் போரைக் குறிப்பிட்ட பேயாழ்வாராற் கூறப்படாமையானும், சிவபிரான்றன் முழுமுதற் றன்மையை அடுத்தடுத்துப் பல்காலும் எடுத்து நாட்டும் ‘மாபாரதக்’ கருத்துக்கு அப்பெருமானைப் பெரிதும் இழிபுபடுத்தும் அக் கதை பெரிதும் முரணாமாகலானும், அவ்வாறு பழைய ய நூல்களுள் எதுவும் சிவபிரானை இழித்துரைப்பக் காணாமையின் அக் கதை அவையெல்லா வற்றுக்கும் முற்றும் மாறாமாகலானும், அது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுமுதல் வந்த பொய்ப் பற்றுள்ள வைணவராற் புதிது படைக்கப்பட்டுத் திருமங்கை, திருமழிசை, சடகோபர் முதலியோரான் மட்டும் எடுத்தாளப்பட்ட தொன்றாகு மென்று கடைப்பிடித் துணர்ந்துகொள்க.

மேலும், திருமங்கை யாழ்வாரே சிவபிரான் முப்புரம் எரித்த வரலாற்றினை மெய்யெனத் தழுவிப்,

புரம்எரி செய்த சிவன்

எனவும்,

எனவும்,

திரிபுரம் மூன்றெரித்தானும்

தழல்நிறவண்ணன் நண்ணார் நகரம்விழ

நனிமலை சிலைவளைவு செய்தங்கு

அழல்நிற அம்பது ஆனவனே

புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப்போதில்

பொங்கெரிக்கு இரை கண்டவன்

எனவும்,

(2,3,1)

(2, 8, 1)

(6, 1, 3)

(10, 2, 9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/251&oldid=1588707" இலிருந்து மீள்விக்கப்பட்டது